சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலாவுடன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி, தன்னை சந்திக்க வந்த மகள், பேரன்களிடம் தன்னை காப்பாற்றுமாறு கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
பெங்களூரு சிறையில் உள்ள இளவரசியை அவரது மகள் மற்றும் பேரன்கள் சென்று சந்தித்துள்ளனர்.
அவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத இளவரசி, ஜெயில்ல இருந்து வரும்போது நான் பிணமாகத்தான் வருவேன்.
இத்தனை வருடம் அவங்களுக்கு சமைச்சுப் போட்டதுக்கும் அவங்க சொன்ன இடத்துல கையெழுத்து போட்டதுக்கும் தான் இப்ப நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
உடம்பு சரியில்லை, எவ்வளவு நாள் உயிரோட இருப்பேன்னு தெரியவில்லை என கதறி அழுதுள்ளார்.
எனினும், எம்.பி தேர்தலுக்கு பின் வெளியே வந்துவிடுவோம் என சசிகலா உறுதியாக உள்ளதாகவும் இளவரசி கூறியுள்ளார்.