Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெயலலிதா அப்போதே இறந்துவிட்டார்: அப்பல்லோ மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்

January 10, 2017
in News
0
ஜெயலலிதா அப்போதே இறந்துவிட்டார்: அப்பல்லோ மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்

ஜெயலலிதா அப்போதே இறந்துவிட்டார்: அப்பல்லோ மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செப்டம்பர் 22 ஆம் திகதியே இறந்துள்ளதாக அப்பல்லோ மருத்துவர் ஒருவர் கூறியதாக வெளியான தகவல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் ஏராளமான மர்மங்கள் அடங்கியிருப்பதாக பொதுமக்கள் சந்தேகத்தில் உள்ளனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. நீதிபதி ஒருவரும் அதே சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

இந்நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த பாலசுப்ரமணிய ஆதித்யன் என்பவர் தன்னுடைய பேஸ்புக பக்கத்தில் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். அதில், முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கவெல்லாம் முடியாது, எனது தோழியின் நண்பரும் அப்பல்லோ மருத்துவமனையில் பகுதி நேரமாக பணிபுரியும் சிறப்பு மருத்துவர் ஒருவர் ஜெயலலிதாவின் அப்பல்லோ சிகிச்சையை நேரில் கண்டவர் கூறிய வாக்குமூலம் இது.

’ஜெயலலிதா செப்டம்பர் 22 ஆம் திகதி அன்றே நாங்கள் இரவில் ஆஸ்பத்திரி வரும்போதே இறந்துதான் இருந்தார். இதை வெளியில் சொன்னால் எங்கள் வேலை பறி போகும் என அப்பல்லோ ஆஸ்பத்திரி ரெட்டி நிர்வாகம் மிரட்டியது.

சசிகலா அடியாட்கள் எங்கள் குடும்பத்தை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். நாங்களும் சாதாரண மனிதர்கள்தானே எங்களுக்கும் உயிர் பயம் உண்டுதானே. எனவே இந்த உண்மையை நாங்கள் கண்ணீருடன் மறைக்க வேண்டியதாகி விட்டது. ஆனாலும் மனம் பொறுக்கவில்லை.

இப்போது மக்கள் கோபத்தில் எல்லா இடத்திலும் கேள்வி கேட்பதால் நாங்கள் உண்மையை கூற தயாராக உள்ளோம். ஆனால் ஊடகங்கள் எங்களை பேட்டி எடுத்து உண்மையை வெளியிட மறுக்கின்றன.

நான் ஏழையாக இருந்த சிறுவயதில் எனக்கு பொருள் உதவி செய்து என்னை இந்த டாக்டர் படிப்பை படிக்க வைத்த புரட்சிதலைவர் MGR ன் உப்பை தின்றவன் என்கின்ற முறையில் இந்த உண்மையை உலகிற்கு தெரியப் படுத்தி விட்டேன். என் உயிருக்கு ஆபத்து வந்தாலும் அம்மாவின் பிள்ளைகள் என் குடும்பத்தை காப்பாற்றுவீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஜெ.வின் மரணத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வந்தாலும், முதல் முறையாக ஒரு அப்பல்லோ மருத்துவரின் பெயர், முகவரி உள்ளிட்ட முழு விபரத்தோடு இந்த பதிவு வெளியாகியுள்ள விவாகாரம் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Featured
Previous Post

தனது இசையால் மன்னிப்பு கோர வைத்த ஈழத்து சிறுமி

Next Post

முதல்வர் பதவி எனக்கே! சசிகலாவிடம் மல்லுக்கட்டும் நடராஜன்

Next Post
முதல்வர் பதவி எனக்கே! சசிகலாவிடம் மல்லுக்கட்டும் நடராஜன்

முதல்வர் பதவி எனக்கே! சசிகலாவிடம் மல்லுக்கட்டும் நடராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures