இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் , ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியான், கீதா கைலாசம், பிரார்த்தனா நாதன், மதுரை முத்து உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் நடிகர் அப்பாஸ் பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை பியான்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெய் வரதா தயாரிக்கிறார். ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. படக் குழுவினர் பங்கு பற்றினர். இந்நிகழ்வில் திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘வாத்தி’ திரைப்படத்திற்காக தேசிய விருதினை வென்ற உற்சாகத்தில் இருக்கும் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் படம் என்பதால்.. இப்படத்திற்கு ரசிகர்களிடம் கூடுதல் கவனம் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.