Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம்

April 18, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம்

‘ஹேப்பி ராஜ் ‘ படத்தின் வணிக ரீதியான மற்றும் விமர்சன ரீதியான வெற்றிக்கு பிறகு இசையமைப்பாளரும், முன்னணி நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

‘ஜோ’ வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் உருவாக உள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் ஜீ வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மனோஜ் நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ்  மற்றும் யுனிவர்ஸ் பேரலல் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘கருடன்’, ‘மாமன் ‘ஆகிய வெற்றி படங்களை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனமும், ஜீ.வி. பிரகாஷ் குமாரின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் கூட்டணி அமைத்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Previous Post

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு ; தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

Next Post

நாடு தழுவிய விசேட சுற்றிவளைப்பு: 296 பேர் கைது – குற்றத் தடுப்பு, போதை ஒழிப்பு தீவிரம்

Next Post
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

நாடு தழுவிய விசேட சுற்றிவளைப்பு: 296 பேர் கைது – குற்றத் தடுப்பு, போதை ஒழிப்பு தீவிரம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures