Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜப்பானில் புகைப்பிடிப்பவர்கள் பேராசிரியராக முடியாது

April 25, 2019
in News, Politics, World
0

ஜப்பானில் புகைப்பிடிப்பவர்கள் பேராசிரியராக முடியாது என்று ஜப்பான் பல்கலைக்கழக நிர்வாகம் புதிய சட்டம் விதித்துள்ளது. ஜப்பானில் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதனல் அங்கு புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஜப்பானில் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் புகைப்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் யூசுகே தாகுகுரா கூறியதாவது: புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள் கல்வித்துறைக்கு பொருத்தமானவர்கள் இல்லை. நாகசாகி பல்கலைக்கழகத்தை புகைப்பிடிப்பவர்கள் இல்லாத பல்கலைக்கழகமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்காக பல்கலைக்கழகத்துக்கு உள்ளே மருத்துவமனை தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் தெவித்துள்ளார். மேலும் புகைப்பிடிக்கும் பழக்கும் உடைய நபர்களை பேராசிரியர்களாக பணியமர்த்த மாட்டோம் என நாகசாகி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதே சமயம் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர், பணியில் சேருவதற்கு முன்பாக புகைப்பழக்கத்தை நிறுத்திவிடுவேன் என உறுதி அளித்தால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Previous Post

தற்கொலை குண்டுதாரி இலங்கை அரசிடம் விருது பெற்றவர்!

Next Post

கொழும்பில் போலீஸ் சோதனையில் 21 கையெறி குண்டுகள்

Next Post

கொழும்பில் போலீஸ் சோதனையில் 21 கையெறி குண்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures