Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி ரணில் வீட்டின் மீது தாக்குதல் |உத்தியோகபூர்வ கார் சேதம்

August 12, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது உத்தியோகபூர்வ காருக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில், காருக்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் 191 மில்லியன் ரூபா என நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

கொழும்பு – 3, 5 ஆம் ஒழுங்கை, இலக்கம் 119 இல் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது தீ வைத்து அவரது கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் ( ஜூலை 9 சம்பவம் ) தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரித்து வரும் நிலையில், அது குறித்த வழக்கு நேற்று (10) கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர மேர்படி சேத பெறுமதியை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது, அதன் அருகே அமைந்துள்ள அவரது சகோதரரான சன்ன நளின் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வீட்டுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதம் 14 மில்லியன் ரூபா எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை அறிக்கையை முன் வைத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த விவகாரத்தில் இதுவரை 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இருவர் பிணையில் உள்ளனர். ஏனையோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் 4,6,7,8 ஆம் இலக்க சந்தேக நபர்களின் கைவிரல் ரேகை பதிவுகளை பெற்று அதனை குற்றப் பிரதேசத்திலிருந்து சேகரிக்கப்பட்டுள்ள கைவிரல் ரேகைகளுடன் ஒப்பீடு செய்து பரிசோதனை செய்ய இதன்போது நீதிமன்றால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் குறித்த வழக்கு மீள விசாரணைக்கு வரவுள்ளது

Previous Post

நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணம் |மின்பாவனையாளர் சங்கம்

Next Post

சாப் கேம் தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு

Next Post
சாப் கேம் தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு

சாப் கேம் தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures