Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி நிதியத்தின் டிஜிட்டல் மாற்றம் ; ஒரே வருடத்தில் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

February 8, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜனாதிபதி நிதியத்தின் டிஜிட்டல் மாற்றம் ; ஒரே வருடத்தில் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரு வருட காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் கிடைப்பது 59% இனால் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் 3,313 விண்ணப்பங்களும், 2023 ஆம் ஆண்டில் 3,456 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.

ஜனாதிபதி நிதியத்தை பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலின் பலனாக, 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் மேலதிகமாக 1,964 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இந்த விண்ணப்பதாரர்களில் 70% க்கும் அதிகமானோருக்கு இதுவரையில் மருத்துவ உதவிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. 2025 ஆம் ஆண்டில் வட மாகாணத்திலிருந்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவது 253%  வீதத்தினால் அதிகரித்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் 135% இனாலும், மத்திய மாகாணத்தில் 116% இனாலும் மற்றும் ஊவா மாகாணத்தில் 108% இனாலும் விண்ணப்பங்கள் கிடைப்பது அதிகரித்துள்ளது.

பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள், 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் பரவலாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வறுமை ஒழிப்பு  நிவாரணகள், கல்வி புலமைப்பரிசில் வழங்கல், கல்வியில் திறமை காட்டும் மாணவர்களை பாராட்டுதல், விசேட தேவையுடையோருக்கான நிதிஉதவிகள், காட்டுயானை தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நிவாரணக் கொடுப்பனவுகள், தேசிய ரீதியில் நாட்டுக்காக சேவையாற்றியவர்களைக் கௌரவித்தல், விபத்துக்கள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிவாரணங்கள் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து சேவைகளையும் ஒன்லைன் (Online) மூலம் அணுகுவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதாவது, 47 வருட காலமாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும், எந்தவொரு பிரதேச செயலகத்தின் ஊடாகவும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு, நன்மைகளை எதிர்பார்க்கும் மக்களுக்கு தற்போது கிடைத்துள்ளது.

Previous Post

இந்தியாவில் பறவைக்காய்ச்சல் | தமிழ்நாடு, பீகார் மாநிலங்களில் காகங்கள் உயிரிழப்பு

Next Post

அயர்லாந்துடனான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

Next Post
அயர்லாந்துடனான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

அயர்லாந்துடனான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

July 12, 2026
அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

July 12, 2026
காணி விடுவிப்பு கோரி பலாலியில் 4வது வாரமாக தொடரும் போராட்டம்!

காணி விடுவிப்பு கோரி பலாலியில் 4வது வாரமாக தொடரும் போராட்டம்!

July 12, 2026
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures