Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதி தமிழ், முஸ்ஸிம் மக்களை ஒதுக்கி விட்டார்! அனந்தி சசிதரன் ஆதங்கம்

April 8, 2017
in News
0

கடற்படையினர் தமது குடும்பங்களை முள்ளிக்குளம் மக்களின் வீடுகளில் குடியமர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் தலைவியும், வடமாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்று 16ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் பிரதி நிதிகள் , மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகியோர் இன்று முள்ளிக்குளம் கிராமத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து உரையாடினர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

முள்ளிக்குளம் கிராம மக்கள் 16 ஆவது நாளாக தமது சொந்த நில மீட்புக்காக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 3 நாட்களில் மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்படுவீர்கள் என கூறி கடற்படையினர் முள்ளிக்குளம் கிராம மக்களை பலவந்தமாக வெளியேற்றினர்.

அந்த மக்களின் உடமைகள் எவையும் கையில் எடுக்காத நிலையில் அந்த மக்களை அவசரமாக வெளியேற்றியுள்ளனர்.

ஆனால் 10 வருடங்கள் கழிந்துள்ள போதும் இன்று வரை அவர்களின் நிலங்களை கடற்படையினர் விடாது தமது குடும்பங்களை குடியேற்றியுள்ளனர். குறித்த செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டு வருட கால நீடிப்பை எடுத்துக்கொண்டுள்ள நிலையில் முள்ளிக்குளம் மட்டுமல்ல மறிச்சிக்கட்டி, வலிவடக்கு, கேப்பாப்புலவு,சம்பூர், ஆகிய கிராம மக்கள் தமது சொந்த நில மீட்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

1 11 111 1111

நில மீட்பு மட்டுமல்ல காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா, கிளிநொச்சி, வடமராட்சி போன்ற பகுதிகளில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசு பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளுகின்றது. இன்று வரை போராட்டக்காரர்களின் போராட்டங்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவேன் என்ற ஒரு வாக்குறுதியைக்கூட வழங்காமல் சர்வதேசத்தின் ஆதரவுடன் தன்னுடைய அராஜகமான போக்குகளை கையாண்டு வருகின்றது.

எனவே குறித்த மக்களின் நியாயமான கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டும். முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி மக்களின் நில மீட்பு போராட்டம் சர்வதேசத்தை சென்றடையும். எனவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையிலான குழுவினர் மறிச்சிக்கட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முஸ்ஸிம் மக்களை சந்தித்தனர்.

முஸ்ஸிம் மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் சுவீகரிப்புச் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்யக் கோரி மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்ஸிம் மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 11 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

தமது பூர்வீகமான குடியிருப்பு நிலங்களையும் விவசாயக்காணிகளையும் மேய்ச்சல் தரைகளையும், மேட்டு நிலக்காணிகளையும் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

புதிய வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ஜனாதிபதி இரத்துச் செய்ய வேண்டும் எனவும் கோரி தாம் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றதாக அந்த மக்கள் தெரிவித்தனர்.

இதன் போது அந்த மக்களுக்கு பதில் வழங்கிய மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறித்த மக்களின் பிரச்சினை குறித்து சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் குறிப்பாக நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப்பீடம் ஏற முஸ்ஸிம் மக்களின் ஒத்துழைப்பு அதிகமாக காணப்பட்டது.

தனது வெற்றியின் பின்னர் தனது வெற்றிக்காக முன் நின்ற முஸ்ஸிம் சமூகத்தை ஜனாதிபதி அவர்கள் ஓரம் கட்டி விட்டதாகவும் தெரிவித்ததோடு, தமிழ்,முஸ்ஸிம் மக்களின் நிலங்கள் தொடர்ச்சியாக ஏதோ ஒரு வகையில் அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றது. எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: Featured
Previous Post

அச்சத்தில் ரணில் : பாதையை நல்லாட்சி தீர்மானித்து விட்டது

Next Post

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப் படுத்துவது எப்படி? அட்டவணை தயாரிக்கும் கூட்டமைப்பு

Next Post
ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப் படுத்துவது எப்படி? அட்டவணை தயாரிக்கும் கூட்டமைப்பு

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப் படுத்துவது எப்படி? அட்டவணை தயாரிக்கும் கூட்டமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures