Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி குறிப்பிட்ட உண்மை விடயங்களை கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தலைமைகள் பகிரங்கப்படுத்த வேண்டும் | கஜேந்திரகுமார்

February 11, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இந்திய வெளியுறவுச்செயலரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்திய முக்கிய விடயம்

ஒற்றையாட்சி முறைமைக்குள் அதிகார பகிர்வு என ஜனாதிபதி குறிப்பிடுவது கேலிக் கூத்தாக உள்ளது. அதிகார பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட உண்மை விடயங்களை அவருடன் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் ,

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம். அவர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் சந்தித்த போது நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறியிருந்தார். எனினும் நாங்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற பிரதமராக இருந்த போது நாங்கள் அவரை சந்தித்தவேளைகளில் அரசியல் தீர்வுக்கான தீர்வு என்ன? என்றும் அவரின் எண்ணங்கள் தொடர்பிலும் கேட்டோம். ஆனால் அவர் சமஷ்டி உள்ளிட்ட நாங்கள் முன்வைத்த விடயங்களை நிராகரித்திருந்தார். அவர் மாவட்ட அபிவிருத்தி சபைகள் தொடர்பிலேயே கதைத்தார்.

ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை வழங்க போவததாக அவர் தற்போது கூறியுள்ளார். அவர் கூறுவதை போன்று ஒன்றுபட்ட நாட்டுக்குள் அதிகாரத்தை பகிர்வது என்பது கேளிக்கூத்தானது. அவரை சந்திக்கும் தமிழ்க் கட்சிகள் அவர் என்ன கூறுகின்றார் என்பதனை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவர் ஒற்றையாட்சி விடயத்தை கூறி ஏமாற்றுகின்றார். அவரின் கொள்கைப் பிரகனடத்தில் 13 தொடர்பில் எதுவும் கூறவில்லை.

இதேவேளை மாவட்ட அபிவிருத்தி சபை தொடர்பில் கூறுகின்றார். இதன்படி 13 தொடர்பில் அவருக்கு அக்கறை இல்லை என்பதே தெளிவாகின்றது. எவ்வாறாயினும் 13 ஆவது திருத்தத்தை மறுக்கின்றோம். பேச்சுவார்த்தைக்கான ஆரம்பமாகக் கூட பார்க்கவில்லை.

இந்தத் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் வருவதால் அதில் எந்தத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. இதனை எங்களின் கட்சி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதனால்தான் நாங்கள் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளை நிராகரித்தோம்.

13 ஆவது திருத்தத்தை நாங்கள் மறுக்கின்றோம். ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மறுக்கப் போவதில்லை. 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இணக்கப்பாட்டை கொண்டதல்ல. இந்தியாவும் இதில் திருப்தியடைவில்லை. சில இணைப்புகள் சேர்க்கப்பட்டதால் இந்தியா அதில் இணங்கியது. ஆனால் நாங்கள் இணங்கவில்லை என்றார்.

Previous Post

சர்ச்சையை கிளப்பியுள்ள ஜடேஜா பூசிய களிம்பு

Next Post

இயல்பாகவும் நேர்மறையாகவும் விளையாடினால் சாதகமான முடிவுகளை பெற முடியும் | சமரி அத்தபத்து

Next Post
இலங்கை ஜப்பான் நிறுவனங்களின் நம்பிக்கையை பெறவேண்டும் | ஜப்பான்

இலங்கை ஜப்பான் நிறுவனங்களின் நம்பிக்கையை பெறவேண்டும் | ஜப்பான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures