Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி இன்று சீனா விஜயம்

October 14, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (14) சீனாவுக்குச் செல்கின்றது. ஒரு பாதை – ஒரு மண்டலம் முன்முயற்சி திட்டத்தின் 10 ஆண்டு நிறைவை முன்னிட்டு பெய்ஜிங்கில் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி தலைமையிலான இந்த உயர்மட்ட குழு சீனா செல்கிறது.

கடன் நிவாரணம் குறித்து சீனாவுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 4.3 பில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்த கட்டம் தொடர்பில் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது பிரதானமாக அவதானம் செலுத்தவுள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசின் முக்கியஸ்தர்களுடன்  பெய்ஜிங்கில் பரந்துப்பட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். குறிப்பாக கடன் மறுசீரமைப்பு, கடன் மீள் செலுத்தலுக்கான தவணைகள், இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியைப் பெறல் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களுக்கு அந்த கலந்துரையாடல்களில் முன்னுரிமையளிக்கப்படவுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட மீளாய்வு அதிருப்தியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளல் இவ்விஜயத்தில் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன அரச தலைவர்களுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து நேரடியாகவே பேசவுள்ளார்.

கொவிட்  பெருந்தொற்று மற்றும் அதன் பின்னரான இலங்கையின் பொருளாதார – அரசியல் கொந்தளிப்புகளை கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய கடன் தவணைகளை செலுத்துவதற்கான இருவருட கால அவகாசத்தை  சீனா ஏற்கனவே வழங்கியுள்ளது. 

எவ்வாறிருப்பினும், எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் குறித்த கால அவகாசம் நிறைவடைகின்ற நிலையில் ஜனவரி மாதத்திலிருந்து கடன் தவணைகளை சீனாவுக்கு செலுத்த வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதே வேளை சீன விஜயத்தின் போது கடன் தவணைகளை மீள செலுத்துவதற்கான கால எல்லையை மீண்டும் நீடிக்கும் கோரிக்கையை இலங்கை முன் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடன் குறித்த பேச்சுவார்த்தைகள் மாத்திரமின்றி முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய புதிய முதலீடுகளை பெற்றுக் கொள்ளல்,  புதிய வர்த்தக  ஒப்பந்தங்களில் கைச்சாத்திடல் மற்றும் தடைப்பட்ட திட்டங்களுக்கான நிதியை  பெற்று மீண்டும் திட்டங்களை ஆரம்பித்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

மேலும், எக்ஸிம் வங்கியுடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் தொடர்பான கலந்துரையாடலும், அம்பாந்தோட்டை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவுள்ளன. குறிப்பாக 4 பில்லியன் டொலர் முதலீட்டில் அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது இறுதி செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

“நான் தமிழனும் இல்லை; சிங்களவனும் இல்லை; நான் ஒரு கிரிக்கட்டர்…!” | முத்தையா முரளீதரன்

Next Post

இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவையை இந்தியப் பிரதமர் ஆரம்பித்து வைத்தார்

Next Post
இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவையை இந்தியப் பிரதமர் ஆரம்பித்து வைத்தார்

இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் சேவையை இந்தியப் பிரதமர் ஆரம்பித்து வைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

June 29, 2026
கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

June 29, 2026
கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures