அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் முன்னிலையாகியுள்ளார்.
அவர் இதற்கு முன்னர் கடந்த 17 ஆம் திகதி அங்கு முன்னிலையாகியிருந்தார்.
அன்றைய தினம் சாட்சிப் பதிவை மேற்கொள்ள போதிய கால அவகாசம் இருக்கவில்லை என்பதன் காரணமாக இன்றைய தினம் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










