Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையில் முரண்பாடா ? எதிர்க்கட்சி பிரதமகொறடா சபையில் கேள்வி

July 5, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையில் முரண்பாடா ?  எதிர்க்கட்சி பிரதமகொறடா சபையில் கேள்வி

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஆனால் அதற்கு எதிராகவே சபாநாயகரின் நடவடிக்கை அமைந்துள்ளது. அதனால் ஜனாதிபதிக்கும் உங்களுக்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருக்கிறதா என எதிர்க்கடசி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றம் புதன்கிழமை (05) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது.

அதில், பாராளுமன்ற குழுக்களில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சி பிரதமகொறடா, சபை முதல்வர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோருக்கு வழகங்கப்பட்டிருக்கும் விரப்பிரசாதங்களுக்கு அமைய அதன் தலைவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளும் உரிமை இருக்கிறது. ஆனால் அவர்கள் அந்த குழுக்களுக்கு செல்வது யோக்கியம் இல்லை என தெரிவித்தார்.

இதன்போது லக்ஷ்மன கிரியெல்ல எம்.பி. ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

அதன் பிரகாரமே எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்க நிதிக்குழுவுக்கு சென்றார் அதற்கு அரச நிதிக்குழுவின் தலைவரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உங்களது தீர்மானத்தின் பிரகாரம் நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதியின் அழைப்புக்கு முரணாகவே அமைந்துள்ளது.

அதனால் ஜனாதிபதிக்கும் உங்களுக்குமிடையில் மோதல் ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் அரசாங்கத்தின் நடவடிக்கைக்ககளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கும்போது அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கே எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்க நிதிக்குழுவுக்கு சென்றார்.

ஆனால் தற்போது அந்த நடவடிக்கையை நிறுத்தும் வகையில் நீங்கள் செயற்படுவதாக இருந்தால், நீங்கள் ஜனாதிபதிக்கு எதிராக செயற்படுபவராக இருக்க வேண்டும் என்றார்.

அதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், எனது அறிவிப்பில் அவ்வாறு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அறிக்கையை முறையாக வாசித்து பாருங்கள் என்றார்.

Previous Post

காதலியுடன் காரில் சென்ற தயாசிறி எம்பியின் மகனை அச்சுறுத்தி பணம், நகைகள் கொள்ளை | பம்பலப்பிட்டியில் சம்பவம்!

Next Post

கொழும்பில் 24 இலட்சம் ரூபா பெறுமதியான வாகன உறுதிப்பாகங்களை திருடிய மூவர் கைது

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

கொழும்பில் 24 இலட்சம் ரூபா பெறுமதியான வாகன உறுதிப்பாகங்களை திருடிய மூவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures