Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சொந்த மண்ணில் 9 ஆண்டுகளின் பின் இந்தியாவை வெற்றி கொண்டது இலங்கை

July 24, 2021
in News, Sports
0
சொந்த மண்ணில் 9 ஆண்டுகளின் பின் இந்தியாவை வெற்றி கொண்டது இலங்கை

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டக்வெல்த்  லூயிஸ் முறையில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சொந்த மண்ணில் 9 ஆண்டுகளின் பின் இந்திய அணியை தோற்கடித்தது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இந்நிலையில் முன்னதாக இடம்பெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியிருந்த நிலையில், நேற்று இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 23 ஓவர்கள் நிறைவில் 147 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தின பின் போட்டி ஆரம்பமானது. இதனால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிரித்வி ஷா 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் பிரவீன் ஜயவிக்ரம மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் இலங்கை அணிக்கு டக்வெர்த் லூயிஸ் முறையில்  47 ஓவர்களில் 227 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 39 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ 76 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் ராகுல் சஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி  2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

தோல்விகளால் துவண்டிருந்த இலங்கை அணிக்கு இந்த வெற்றி பெரும் ஆறுதல் வெற்றி என்பதுடன் இலங்கை ரசிகர்களின் மனங்களையும் ஆறுதல் படுத்தியுள்ளதுடன் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் வைத்து கடந்த 9 ஆண்டுகளின் பின் இந்திய அணியை தோற்கடிகத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தமிழர்களுக்கான அரசியல் தீர்வில் மாகாணசபை முறைமை முழுத் தோல்வி! – மங்கள சமரவீர

Next Post

ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில்

Next Post
ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில்

ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures