செலுத்தப்படாத வேக ரிக்கெட்டுக்களிற்கு உரிமத்தகடு மறுக்கப்படும்!
கனடா-ஒன்ராறியோவின் வேக சட்ட மீறல்கள் நிலுவையில் உள்ள அபராதங்களை செலுத்துவதற்கான மேலதிக அழுத்தங்களை கொண்டு வருகின்றது. இதன் காரணமாக மாகாணம் நகராட்சிகளிற்கு உரிமத்தகடுகளை வழங்க மறுக்கும் அதிகாரத்தை கொடுக்கின்றது.
டிரைவிங் சார்ந்த குற்றங்களான வேகம், கவன குறைவான வாகனம் செலுத்தல் போன்ற குற்றங்களிற்கான அபராம் செலுத்தாத சாரதிகள் தங்கள் உரிம தகடுகளை புதுப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவர். லிபரல் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த மாற்றம் மே மாதம் நடை முறைக்கு வருகின்றது.
தரிப்பிட ரிக்கெட் மற்றும் சிவப்பு-விளக்கு கமரா அபராதங்களிற்கு தகடு மறுப்பு வழங்க பட உள்ளது.
மாகாணத்தின் நகராட்சிகள் 1.4பில்லியன் டொலர்கள் செலுத்தப்படாத அபராத தொகையை நிலுவையில் கொண்டுள்ளது.
ஒன்ராறியோ நகராட்சிகள் சங்கம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இத்தொகையை அறவிட வழிகளை அரசாங்கத்திடம் கேட்டு வருகின்றது.
சில அபாரதங்கள் 50-வருடங்களிற்கும் மேலானவை என்றும் சேகரிக்க சாத்தியமற்றவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் கொள்கையை ஏழு ஆண்டுகளாக்குகின்றது. கட்டப்படாத அபராத தொகையின் மூன்றில் ஒரு பங்கு கடந்த ஏழுவருடங்களினதாகும்.
நிலுவையான அபராத தொகை கட்ட வேண்டிய மக்களிற்கு வலுவான செய்தியை நகராட்சி அனுப்புகின்றது.
அபராத தொகை செலுத்தாதவர்களிற்கு லைசென்ஸ் இடைநீக்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆனால் உரிமத்தகடு மறுப்பு ஒரு மேலதிக உந்துசக்தியாக அமைகின்றதென கூறப்படுகின்றது.