செந்தமிழன் சீமான் – கயல்விழி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த இனிய தருணத்தில் அவர்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு குழந்தையின் பிறப்பு என்பது ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி மட்டுமல்ல; அது ஒரு புதிய நம்பிக்கையின் பிறப்பும் ஆகும். உங்கள் இல்லத்தில் பிறந்த இந்தச் செல்ல மகள், அன்பிலும் அறிவிலும் ஆரோக்கியத்திலும் சிறந்து வளர வாழ்த்துக்கள். அவள் உங்கள் குடும்பத்திற்கு என்றும் ஒளியாய், மகிழ்ச்சியாய், பெருமையாய் விளங்கட்டும்.
தமிழ் மொழி, தமிழ் உணர்வு, மனித நேயம் ஆகியவற்றை மதிக்கும் பண்புகளுடன் அவள் வளரவென பிரார்த்திக்கிறேன். பெற்றோரின் அன்பும் வழிகாட்டுதலும் அவளுக்கு வலிமையாக இருந்து, எதிர்காலத்தில் நல்ல மனிதராக உயரச் செய்யட்டும்.
எம் இனத்திற்காக குரல் கொடுக்கும் தலைவனாய், மக்கள் செயற்பாட்டாளனாய், உரிமைகளுக்கான போராளியாய் எல்லாவற்றிற்கும் மேலாய் எம் பாசமான அண்ணாவாய் இருக்கும் சீமான் அவர்களின் பணி ஈழ தேசத்திற்க அவசியமானது.
இந்த இனிய தருணத்தில் சீமான் – கயல்விழி தம்பதிக்கும், குடும்பத்தினருக்கும் மீண்டும் என் அன்பான வாழ்த்துகள். தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை
