Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ வெளியீட்டு திகதி அறிவிப்பு

June 29, 2022
in Cinema, News
0
தேவர்மகன் 2ஆம் பாகத்தில் விக்ரம்?

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘கோப்ரா’ படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படத்தை தொடர்ந்து வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் கோப்ரா படத்தையும் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கோப்ரா’.

இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ பட புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் மியா ஜோர்ஜ், இர்பான் பதான், பத்மபிரியா, கனிகா, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், கே.எஸ். ரவிக்குமார், ரோபோ சங்கர், பாபு அண்டனி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. அந்த வகையில் ஓகஸ்ட் மாதம் 11-ம் திகதியன்று இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் வேறு மொழிகளிலும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தையும் அண்மைக்காலமாக தமிழக முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களை பட மாளிகையில் தொடர்ந்து வெளியிட்டு, தயாரிப்பாளர்களுக்கு அதிக சதவீத லாபத்தை அள்ளித்தரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் படமாளிகையில் வெளியாவதாலும், திரில்லர் எக்சன் ஜேனரில் தயாராகி இருப்பதாலும், ‘கோப்ரா’ படத்திற்கு விக்ரமின் ரசிகர்களை தவிர்த்து, ஏனைய நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Previous Post

ஈஸி24நியூஸின் யூடியூப் செய்திகள்

Next Post

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Next Post
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

November 23, 2026
நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

November 23, 2026
பிள்ளையான் பெயரில் கைதான திரிபோலி கொலைக்குழு உறுப்பினர்

கிழக்கில் 5 பேர் கொலை: பிள்ளையானுக்கு டிச. 07 வரை விளக்கமறியல் நீடிப்பு!

November 23, 2026
பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?: கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தேடும் போலீஸ்

பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?: கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தேடும் போலீஸ்

November 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures