Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சீமான் வெளியிட்ட ‘நந்தன்’ திரைப்படத்தின் இசை, முன்னோட்டம்

September 16, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
சீமான் வெளியிட்ட ‘நந்தன்’ திரைப்படத்தின் இசை, முன்னோட்டம்

சசிகுமார் நடிப்பில் எதிர்வரும் இருபதாம் திகதி என்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் நந்தன் எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதனை திரைப்பட இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் எனும் அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ‘செந்தமிழன்’ சீமான் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.‌

இயக்குநர் இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நந்தன்’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சுருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். வி. சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். 

ஆதிக்க சாதி அரசியலுக்கும் – ஒடுக்கப்பட்ட சாதி அரசியலுக்கும் இடையேயான மோதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இரா என்டர்டெயின்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் இரா. சரவணன் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது பட குழுவினருடன் முன்னணி நட்சத்திர இயக்குநர் ஹெச். வினோத், இயக்குநர் ரோஹின் வெங்கடேசன், இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, ‘செந்தமிழன்’ சீமான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி சிறப்பித்தனர்.

படத்தைப் பற்றி செந்தமிழன் சீமான் பேசுகையில், ” இந்த திரைப்படத்தை என் அன்பு நண்பர் இரா சரவணனின் வேண்டுகோளுக்கு ஏற்ப குடும்பத்தினருடன் அண்மையில் பார்த்தேன். இந்தத் திரைப்படம் பல ஆண்டுகளாக இந்த இனம் தூக்கி சுமந்து வரும் வலியை நேர்த்தியான திரை மொழியில் பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தை பார்த்த பிறகு இன்றும் கூட அதன் தாக்கம் எனக்குள் இருக்கிறது.

மனதை தாக்கும் மிக நல்ல படைப்புகளின் வருகை தற்போது குறைந்திருக்கிறது. அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் சிறந்த படமாக ‘நந்தன்’ அமைந்திருக்கிறது. நாம் வாழும் இந்த நிலத்தின் கதையை இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இது வலியின் மொழி. மக்கள் அனுபவிக்கும் வலியை புரிந்தவர்களுக்கும் உணர்ந்தவர்களுக்கும் இந்த திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.

மேலும் இது ஒரு ஆக சிறந்த படைப்பு.‌ இந்த படைப்பினை வழங்கிய அனைவருக்கும், இந்த படைப்பில் பங்கு பற்றிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றியடைய வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்” என்றார்.

Previous Post

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி | இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு !

Next Post

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க முகவர்கள் களமிறக்கம் | ரிஷாட் 

Next Post
“மக்கள் மீது வரிகளை சுமத்தாமல் மாற்று வழிகளை கையாளுங்கள்” | மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க முகவர்கள் களமிறக்கம் | ரிஷாட் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

November 21, 2026
முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

November 21, 2026
இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

November 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures