ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘2.0’ படம் செப்டம்பர் 6ம் தேதி சீனாவில் 47000 திரைகளில் வெளியாக உள்ளது. அதற்கான முன்பதிவு கடந்த வாரமே ஆரம்பமாகிவிட்டது.
இதுவரையில் நடந்துள்ள முன்பதிவு மூலம் 1 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. படத்தின் முதல் நாளிற்கு நல்ல முன்பதிவு கிடைத்துள்ளது. அதற்கடுத்த நாட்களுக்கு மிகச் சுமாராகத்தான் முன்பதிவு நடந்துள்ளதாம்.
படம் வெளியாகி அதன்பின் வரும் விமர்சனங்களைப் பொறுத்து வசூல் கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள். சீனாவில் ஹிந்திப் படங்கள் மட்டுமே நல்ல வசூலை அள்ளுகின்றன. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் கூட பெரிய அளவில் வசூலிக்கவில்லை.
2.0 சீனாவில் சாதனை படைக்குமா அல்லது பின்னடைவை சந்திக்குமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.