சீனாவில் பாலை வனத்தை விவசாய நிலமாக மாற்றி விவசாயம் செய்து வருகின்றனர்.
சீனாவின் கான்சூ மாகாணத்தில் உள்ள சுசோகு மாவட்டம் கோபி பாலை வனத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு பாலைவனத்தால் சூழ்ந்துள்ளதால், விவசாய செய்கை கடினமான ஒரு விடயமாக காணப்பட்டு வருகின்றது. குறிப்பாக கோடை காலத்தில் இங்குள்ள மக்கள் துயரங்களை அனுபவித்து வந்துள்ளனர்.
இதனால் இங்கு விவசாயிகள் மற்றும் வேளான்துறை அதிகாரிகள் இணைந்து, பச்சை வீட்டு திட்ட முறையில் இயற்கையான முறையில் விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனடிப்படையில் 80 ஹெக்டர் அளவுக்கு இங்கு தற்பொழுது பாலைவன பயிர்ச்செய்கை நடைபெற்று வருகின்றது. இதனால் பாலைவனம் விவசாய நிலமாக மாற்றப்பட்டு வருகின்றது.