சீனாவில் பாரிய விபத்திலிருந்து இருவர் உயிர் தப்பிய சம்பவம்; சீ.சீ.டிவியில் பதிவு
பாரிய ஆபத்திலிருந்து ஒருவர் உயிர்தப்பினால் உனக்கு நூறு ஆயுள் என்பது முதுமொழி. இந்த முதுமொழியை நிரூபிக்கும் சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. மிகவும் மோசமான விபத்திலிருந்து சீனாவைச் சேர்ந்த இருவர் உயிர் தப்பிய சம்பவம் குறித்த காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் கிழக்கு மாகாணமான ஷேஜியாங்கில் நேற்றைய தினம் காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றது.
வீதியோர சீ.சீ.டிவி கமராவில் பதிவாகியுள்ள காணொளிக்கு அமைய நிங்போ நகரில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது வான் ஒன்று பிரதான நெடுஞ்சாலைக்குள் நுழைய முற்பட்டபோது நெடுஞ்சாலையில் வேகமாக வந்த பார ஊர்தியொன்று வானுடன் மோதி குறித்த வானிற்கு மேல் குடைசாய்ந்துவிட்டது.
இதனால் குறித்த வான் பார ஊர்த்தியின் கீழ் சிக்குண்டு நசுக்கப்பட்டு சின்னாபின்னமாகியது.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவசர சேவைக்கு அழைப்பு விடுத்ததற்கு அமைய அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் குறித்த வானில் சிக்குண்டிருந்தவர்களை மீட்டனர்.
இதன்போது வானில் இருந்த சாரதி உட்பட இருவரும் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சுமார் 20 நிமிட நேரம் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
கோர விபத்துக்கு முகம்கொடுத்தும் எந்தவித ஆபத்தும் இன்றி தெய்வாதீனமாக உயிர் பிழைத்த இந்த சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
.
– See more at: http://www.canadamirror.com/canada/67997.html#sthash.H0rGaPUj.dpuf