மொன்றியல் அல்டோ நிறுவனர் 25-மில்லியன் டொலர்களை மொன்றியல் மக்கில் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளார். பல்கலைக்கழகத்தில் சில்லறை மேலாண்மை பள்ளி ஒன்றை கட்டுவதற்கு இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இந்த பல மில்லியன் டொலர்கள் நன்கொடை பென்சடன் குடும்ப அறக்கட்டளையில் இருந்து அல்டோ குரூப் நிறுவனர் அல்டொ பென்சடன் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
இப்பணத்துடன் மக்கில் பல்கலைக்கழகம் இளங்கலை மாணவர்கள் முதல் PhD மாணவர்களிற்கான சில்லறை மேலாண்மை துறையை நிறுவ திட்டமிட்டுள்ளது.
இத்துறையில் மாணவர்கள் சில்லறை வணிகம் எதிர் நோக்கும் பிரச்சனைகளிற்கு தீர்வு காணல் மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் குறித்தும் மாணவர்களும் ஆய்வாளர்களும் கண்டறிவார்கள் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இப்பிரிவு 2018 முன்பனி காலத்தில் ஆரம்பமாகும் என தெரியவருகின்றது.