நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகி வரும் ‘பத்து தல’ திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘சில்லென்று ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘ பத்து தல’. இதில் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். நடிகை பிரியா பவானி சங்கர் நாயகி வேடத்தில் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், ஜோ மல்லூரி, சௌந்தர்ராஜா, டிஜே, தீரஜ் கெர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நவீன் குமார் மற்றும் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் அதன் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
‘மாநாடு’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து சிலம்பரசன் நடப்பில் நடிப்பில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிம்பு நடிப்பில் தயாராகி வரும் ‘மஹா’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ ஆகிய படங்களின் வெளியிட்டு திகதி அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.