Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறை – திரைப்பட விமர்சனம்

December 25, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

தயாரிப்பு : செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்

நடிகர்கள் : விக்ரம் பிரபு, எல் கே அக்ஷய் குமார், அனிஷ்மா அனில் குமார், ஆனந்த தம்பி ராஜா, மூணார் ரமேஷ், பி. எல். தேனப்பன் மற்றும் பலர்.

இயக்கம் : சுரேஷ் ராஜகுமாரி

மதிப்பீடு: 3 / 5

கொலை குற்றவாளி என கருதப்பட்டு தமிழகத்தின் வட பகுதியான வேலூர் சிறையில் இருக்கும் அப்துல் ரவூப் ( எல். கே. அக்ஷய் குமார்) எனும் குற்றவாளியை தமிழகத்தின் தென் பகுதியான சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக ஆயுதப்படை காவலரான கதிரவன் ( விக்ரம் பிரபு) தலைமையிலான குழுவினர் அழைத்துச் செல்கிறார்கள்.  கைதியை பாதுகாப்புடன்  பேருந்தில் அழைத்துச் செல்லும் போது உணவுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் தருணத்தில் துப்பாக்கியுடன் கைதி தப்பி விடுகிறார்.

அதன் பிறகு காவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் அவரை தேடி கண்டுபிடித்தார்களா? நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தினார்களா? இல்லையா? அந்த கொலை குற்றவாளியின் பின்னணி என்ன? என்பதை விறுவிறுப்பும் பரபரப்பும் கலந்து சொல்வது தான் இப்படத்தின் கதை.

காவலர் கதிரவனுடைய கோணத்தில் தொடங்கும் இந்த கதையில் மூன்றாவது நிமிடத்தில் தொற்றிக் கொள்ளும் பரபரப்பு உச்சகட்ட காட்சி வரை குறையாமல் நீடிக்கிறது.

முதல் பாதியில் பார்வையாளர்கள் எளிதாக யூகிக்கும் வகையில் கதை பயணித்தாலும் அதனை காட்சிப்படுத்தி இருப்பதில் ஒட்டுமொத்த படக் குழுவினரும் பார்வையாளர்களை நுட்பமான விவரணங்கள் மூலம் வியக்க வைக்கிறார்கள்.

அப்துல் ரவூப் – கலையரசி( அனீஷ்மா அனில் குமார்) இடையேயான காதல் காட்சிகள்-  பிளாஷ்பேக்கில் வந்தாலும் இளமை துள்ளல்.

ஐந்தாண்டுகளாக விசாரணை கைதியாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்துலிடம் நீதி அரசர், நீதிமன்ற நடைமுறை குறித்து  நீண்ட கால தாமதத்திற்காக அவரிடம் மன்னிப்பு கேட்பதை நீதிமன்றத்தில் இடம்பெற வைக்காமல் நீதியரசரின் பிரத்யேக அறையில் அவருடைய தனிப்பட்ட கருத்தாக இடம்பெற செய்யும் அளவிற்கு நுட்பமாக யோசித்த இயக்குநர் பேருந்தில் கைதியை விலங்கிட்டு அழைத்துச் செல்லும் காட்சியில் உணவு பசியாறிய பின் பேருந்தை இயக்கும் போது அந்த மூன்று பயணிகள் இல்லாமல் பேருந்தை நடத்துனரும், சாரதியும் எப்படி தொடர்ந்து இயக்க முடியும்? என்ற சட்டபூர்வமான நடைமுறையை மறந்தது ஏன்? என தெரியவில்லை.

இஸ்லாமியர்களை பற்றிய கருத்தியல் இயல்பாக விவரிக்கப்பட்டிருந்தாலும் .. அதிலும் பிரச்சார தொனி எதிரொலிக்க தான் செய்கிறது. குறிப்பாக காதர் பாட்ஷா எனும் காவலரின் உரையாடல் அப்பட்டமான திணிப்பு.

கதிரவன் என்ற ஆயுதப்படை காவலராக நடித்திருக்கும் விக்ரம் பிரபு அவருடைய திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத அழுத்தமான நடிப்பை வழங்கி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறார். அத்துடன் படத்தின் இறுதிக் காட்சியில் சக காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, ‘வெகுஜன மக்களுக்கு நண்பனாக இருந்து உங்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச அதிகாரத்தின் மூலம் ஏதேனும் உதவி செய்ய வாய்ப்பு கிடைத்தால்.. உதவி செய்யுங்கள் ‘ என்ற கோரிக்கையை முன்வைக்கும் இடத்தில் இயக்குநர் – விக்ரம் பிரபு உள்ளிட்ட படக் குழுவினருக்கு ராயல் சல்யூட் வைக்கலாம்.

அப்துல் ரவூப் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நாயகன் எல். கே. அக்ஷய் குமாருக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த அறிமுக நாயகன் விருது கிடைக்கும் என உறுதியாக கூறலாம்.

கலையரசி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை அனீஷ்மா அனில் குமார் இளமை துள்ளலுடன் காதல் காட்சிகளில் அற்புதமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்கிறார்.

ஒளிப்பதிவு , பின்னணி இசை ஆகியவற்றை விட படத்தொகுப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

சிறை – ஆண்டின் இறுதியில் கிடைத்த சிறந்த இரை.

Previous Post

பொலிஸார் துரத்தி சென்ற கார் கோர விபத்து – மூவர் படுகாயம்!

Next Post

ஆவண படமாக உருவாகியுள்ள ‘ஆர் எம் வி : தி கிங் மேக்கர்’

Next Post
ஆவண படமாக உருவாகியுள்ள ‘ஆர் எம் வி : தி கிங் மேக்கர்’

ஆவண படமாக உருவாகியுள்ள 'ஆர் எம் வி : தி கிங் மேக்கர்'

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026
அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும் – சுரேஷ்

வவு­னியா மேயர், சாவகச்சேரி உதவித் தவிசாளர் ஆகியோரை பதவி நீக்கியமைக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures