ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய பயணம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்.
சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர், ஜனாதிபதி திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
எனினும் இறுதி நேரத்தில் இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதியின் திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

