Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறப்பு அறிக்கையாளரை இலங்கைக்கு நியமிக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெனீவாவில் வலியுறுத்து

September 23, 2020
in News, Politics, World
0

“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்த வேண்டும். இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமித்து, அவர் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பதிவுசெய்து உலகிற்கு அறிவிக்க வேண்டும்” என ஐக்கிய நாடுகளது மனித உரிமை ஆணையத்திடம் வலியுறுத்துவதாக உலக பாதிக்கப்பட்டோருக்கான அமைப்பின் (Association pour les victimes du Monde) சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய ரமேசு கோவிந்தசாமி தெரிவித்திருக்கின்றார்.

மனித உரிமை ஆணையத்தின் உயர் ஆணையர் வழங்கிய அறிக்கைக்கு நன்றி கூறி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிகழ்த்திய உரையிலேயே இதனை அவர் வலியுறுத்தினார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;

“முள்ளிவாய்க்கால் நினைவு, கறுப்பு யூலை நினைவு, 12 நாட்கள் நீர், உணவு இல்லாமல் தனது வாழ்வை அர்பணித்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு ஆகிய நினைவு நாட்களை நினைவுகூற தடைவிதித்தனர் இலங்கை அரசாங்கத்தினர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் இன அழிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தெருவில் நின்று நீதிக்காக போரடிக் கொண்டிருக்கின்றனர், பதினொரு ஆண்டுகள் கடந்தும் அவர்கள் அனைவரும் இந்த உயரிய மன்றத்திடமிருந்து நீதிக்காக காத்திருக்கிறார்கள்.

11 ஆண்டுகளாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புகள் உலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை நினைவுகூர்ந்து வருகின்றனர். ஆனால் இன்றைய சிங்கள பேரினவாத அரசும், காவல்துறையும், இராணுவமும் 200க்கு மேற்பட்ட உறுப்பினர்களை மிரட்டி, துன்புறுத்தி உலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை நினைவுகூற தடைவிதித்தனர்.

நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அதற்காக சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளும் பௌத்த துறவிகளும், ஊடகங்களும் அவரை எதிர்க்கின்றன, மிரட்டுகின்றன. ஆனால் உலக நாடுகள் அமைதிக் காக்கின்றன.

இலங்கையை உலக குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்றும், இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமித்து, அவர் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பதிவுசெய்து உலகிற்கு அறிவிக்கவேண்டும் என்றும் வடக்கு கிழக்கு இராணுவமயமாக்கலையும் காலனியாக்குவதையும் நிறுத்துவேண்டுமென்றும் ஐக்கிய நாடுகளது மனித உரிமை ஆணையத்திடம் வலியுறுத்துகிறேன்.”

Previous Post

சம்மாந்துறையில் இங்கிலாந்து தயாரிப்பு துப்பாக்கி, கத்தி மீட்பு

Next Post

தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்கு TAB உபகரணங்கள்

Next Post

தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்கு TAB உபகரணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

July 14, 2026
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

July 14, 2026
விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

July 13, 2026
தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

July 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures