சிரிய அகதிகளின் வருகை சிக்கல்கள் குறைவானதாக இருக்கும்
இந்த ஆண்டு ஆரம்பத்தில் கனடாவிற்குள் உள்வாங்கப்பட்ட சிரிய அகதிகளின் வருகையை விட, எதிர்வரும் இலையுதிர் காலத்தில் வருகை தரவுள்ள இரண்டாவது தொகுதி சிரிய அகதிகளின் வருகை, சிக்கல்கள் குறைவானதாக இருக்கும் என குடிவரவு ஆதரவுக் குழுக்கள் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில், பல்வேறு கட்டமாக 19,000 சிரிய அகதிகள் கனடாவிற்குள் உள்வாங்கப்பட்டனர்.
ஆனால் அரசின் இலக்கான 25,000 அகதிகளை அடைவதற்கு, மேலும் 6,000 அகதிகள் இவ்வருட இலையுதிர் காலத்தில் அழைத்து வரப்படவுள்ளனர்.
இந்நிலையில், ரொன்ரோ மாநகரில் அமைந்துள்ள COSTI குடிவரவுச் சேவைகள் நிறுவன அதிகாரி Mario Calla, இது குறித்து கூறுகையில்,
இரண்டாவது தொகுதி சிரிய அகதிகளை உள்ளெடுக்கத் தேவையான ஆயத்தங்களைச் செய்யப் போதுமான கால அவகாசம் இருப்பதாகவும், முதலாவது தொகுதி அகதிகளின் வருகை தொடர்பான ஆயத்தங்கள் குறுகிய காலப் பகுதியிலேயே செய்து முடிக்கப்பட்டதாகவும். தெரிவித்துள்ளார்.