அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், வீரா — மாளவிகா ஜோடியாக நடிக்கும், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா படம், டிச., 27ல் வெளியாகிறது. பசுபதி, ரோபோ சங்கர், ஷாரா, நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர், முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.படம் குறித்து, மாளவிகா கூறுகையில், ”இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். பொதுவாக, ‘சீரியஸ்’ கதாபாத்திரங்களில் நடிப்பவர்களும் கூட, இதில் காமெடி வேடத்தில் வருகின்றனர். இரண்டு மணி நேர சிரிப்புக்கு, நான் உத்தரவாதம்,” என்றார்.