முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள சின்னச்சாளம்பன் குளத்தின் அபிவிருத்திக்குரிய பணம் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளபோதிலும் அப் பணியை மேற்கொள்வதற்கு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
சின்னச்சாளம்பன் குளத்மினை நம்பி பலழூறு விவசாயிகள் செய்கையில் ஈடுபடும் நிலையில் போரிற்குப் பின்னர் குறித்த குளத்தில் எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படாத நிலமையில் அக் குளத்தினை புனரமைத்து தருமாறு கமநல சேவைத் திணைக்களம் முதல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையில் நடையாக அலைந்தோம் . அதன் பிரகாரம் தற்போது குறித்த குளத்மின் அபிவிருத்திக்காக 13 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு கமநல சேவைத் திணைக்களத்திற்கு எழுத்தில் அறிவித்முள்ளது.
அவ்வாறு அறிவித்த பின்னரும் திணைக்களம் எந்தப் படியும் மேற்கொள்ளாது இருப்பது தொடர்பில் ஐயம்கொண்டே தேடுதலில் ஈடுபட்ட சமயம் குறித்த குளம் அமைந்துள்ள பிரதேசம் தமது ஆளுகையின் கீழ் வருவதனால் அங்கே எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளக் கூடாது என மகாவலிப் பூதம் தடைவிதிக்கின்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே இது தொடர்பில் அதிகாரிகள் உடன் தலையிட்டு குளத்தினை புனரமைத்து தர வேண்டும். என குறித்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுப்பது தொடர்பில் மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
மேற்படி குளமானது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்மிற்கு இன்றி அமையாதோர் குளம் என்பதில் சந்தேகம் இல்லை. இதேநேரம் குறித்த குளத்தின் அபிவிருத்தி தொடர்பில் நாம் கடந்த காலத்தில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் தொடர்பு கொண்டபோது புனரமைப்பிற்கு தமது சம்மத்த்தினை தெரிவித்திருந்தனர். இருப்பினும் தற்போது தமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தாமே அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என கூறுகின்றனர்.்இதன் காரணமாகவே பணிகள் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவும் மகாவலி தொடர்பில் உள்ள ஏனைய பிரஞ்சணைகள் மொடர்பிலும் எதிர்வரும் 26ம் திகதி மகாவலி அபிவிருத்தி அதிகார சபையுடன் ஓர் விசேட கலந்துரையாடலிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்றார். இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராயாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
.
மேற்படி விடயம் மொடர்பாக அப்பகுதி மக்கள் தமது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளனர்.்இதன் பிரகாரம் குறித்த விடயம் எதிர்வரும் 22ம் திகதிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். என்றார்.

