‘சிங்கம் 3’ அப்டேட்: தமிழக ரிலீஸ் உரிமைக்கு மவுசு

‘சிங்கம் 3’ அப்டேட்: தமிழக ரிலீஸ் உரிமைக்கு மவுசு

 

 சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சிங்கம் 3’ படத்தின் தமிழக உரிமை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.

’24’ படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சிங்கம் 3’. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. இறுதியாக மலேசியாவில் ஒரு முக்கியமான சண்டைக்காட்சியை படமாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

இன்னும் படப்பிடிப்பு முடிவடையாத நிலையில், இப்படத்தின் தமிழக உரிமையை சுமார் ரூ.41 கோடிக்கு விலை போயிருக்கிறது. இதனை உதயம் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் வாங்கியிருக்கிறது.

படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் முடிவடைவதைப் பொறுத்து படத்தை தீபாவளி அல்லது டிசம்பரில் வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள்.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News