சாத்தியமான உணவு நச்சுத்தன்மையினால் 30 மாணவர்கள் வைத்தியசாலையில்?
கனடா-ஹம்பர் கல்லூரி தங்குமிடத்தில் வசிக்கும் 29மாணவர்கள் வரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. மற்றொரு 30 மாணவர்கள் இதே போன்ற அறிகுறிகளுடன் தாங்களாகவே சென்றுள்ளனர்.
மாணவர்கள் சுகயீனமுற்றதாக இரவு 9.30மணியளவில் அவசர மருத்துவ சேவையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மாணவர்கள் வாந்தி எடுத்ததுடன் வயிற்றுவலியால் துன்புற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிராபத்தான நிலைமை இல்லையென அறிவிக்கப்படுகின்றது. சில மாணவர்கள் வைத்தியசாலையில் தங்கியதாக கல்லூரி தெரிவிக்கின்றது.
இச்சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.
வளாகத்தில் காய்ச்சல் வைரஸ் சுற்றியோடுவதாக வளாகம் தெரிவிக்கின்றது.