சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார் இராஜாங்க அமைச்சர்
காணாமல் போன உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் முடித்து வைத்தார்
காணாமல் போன உறவுகளினால் கடந்த திங்கள் கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தசாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று மாலை 6 மணியளவில் பாதுகாப்புஇராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நீராகாரம் வழங்கி முடித்து வைத்தார்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் 14 பேர் நான்காவது நாளாக காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறு, சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றிவிடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்’ ஆகிய கோரிக்கைகளைமுன்வைத்தே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களின் உடல் நிலை மோசமடைந்துவந்த நிலையில் நான்காவது நாளான இன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு அங்கு வருகைதந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள், அருட்தந்தையர்கள் உள்ளிட்ட 16 பேர்கொண்ட குழுவினருடன் எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பு அலரி மாளிகையில் காலை 11மணிக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்,நீதித்துறை அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பேச்சுக்களை நடத்தி இதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக எழுத்து மூலம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்உறுதி மொழி வழங்கியுள்ளார்.
இதையடுத்தே அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட இணங்கினர். அதன்பின்நீராகாரம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
நாளாவது நாளாகவும் தொடர்ந்த சாகும் வரை உண்ணாவிரத போராட்டமானது சற்று முன் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமையன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இன்று வரை தொடர்ந்திருந்தது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் இன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது பாதுகாப்பு அமைச்சர் எழுத்து மூலமாக இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து போராட்டம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 4 பேரின் உடல் நிலை மோசமான நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.