Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சவுதியில் கோர விபத்து: மருதமுனை இளைஞர் மரணம்

April 21, 2019
in News, Politics, World
0

சவுதி அரேபியாவில்  இடம்பெற்ற வாகன விபத்தில் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வபாத்தாகியுள்ளார். இவ்வாறு மரணித்த இளைஞரின் பெயர் முகம்மட் ரிஹாஸ் உவைஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ் விபத்தில் மருதமுனையைச் சேர்ந்த மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சவுதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது

நேற்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உணவு உண்பதற்காக இவர்கள் மூவரும் சவுதி அதிவேகப் பாதை வழியே சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் இவர்கள் சென்ற வாகனத்துடன் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றதாக எமது இணையத்தள சவுதி செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இவ்விபத்தில் சிக்கிய மூவரூம் மருதமுனையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒருவர் சம்பவ இடத்தில் மரணித்துள்ளதுடன் ஏனைய இருவரில் ஒருவரின் கால் ஒன்று அகற்றப்பட்டுள்ளதாகவும் மற்றையவர் கோமா நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

இவ்விபத்து தொடர்பில் சவுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தள சவுதி செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

Previous Post

வட மாகாணத்தை அரசாங்கம் தமிழீழம் என்று பெயரிட்டு அம்மக்களுக்கு வழங்குதல் வேண்டும்

Next Post

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு

Next Post

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures