சர்வதேச பெண்கள் தினத்திற்கு ஆதரவாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை!
ஒட்டாவா-பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மேரி-கிளவ்டி பிபோ மத்திய அரசாங்கம் அடுத்த மூன்று வருட காலப்பகுதியில் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரத்திற்காக 650-மில்லியன் டொலர்களை செலவழிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளனர்.
சர்வதேச மகளிர் தினத்தன்று வெளியிட்ட இந்த ஆதரவு– பாலியல் கல்வியில் இனப்பெருக்க சுகாதார சேவைகளை மேம்படுத்தல் மற்றும் குடும்ப கட்டுப்பாடு கருத்தடை சாதனங்களில் முதலீடு ஆகியனவற்றில் முதலீட செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றய பின்பகுதியில் ட்ரூடோ 338 பெண்களை கவனிப்பார்–நாட்டிலுள்ள ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலிருந்தும் ஒவ்வொருவராக– Daughters of the Vote ன் ஒரு பகுதியாக கீழ் சபையில் ஆசனங்களை பெறுவர் என அறியப்படுகின்றது. இத்திட்டம் அவர்களின் தலைமை அரசாங்கம் மற்றும் அரசியல் போன்றவற்றில் அவர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தை கொண்ட ஒரு திட்டமாகும்.
கனடாவிலும் கனடாவிற்கு வெளியிலும் பாலின சமத்துவத்தை உண்டு பண்ணுவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் பெண்கள் மற்றும் பெண்கள் உரிமைகள் வழக்கறிஞர்கள் பிரதமர் இன்னமும் நிறைய செய்ய வேண்டியுள்ளதென தெரிவிக்கின்றனர்.