சுதந்திரம் எம் பிறப்புரிமை!அதனை யார் தட்டிப் பறித்தாலும் அதனை மீட்டெடுக்கப் போராட தயங்கலாகாது.நாடுகளின் அங்கீகாரம் தான் எம் விடுதலையை உறுதி செய்யும்.
உலக ஒழுங்கில் நாடாகநாம் இணைய வேண்டின் ஒரு நாட்டிற்கான தகுதி உடையவர்களாக ஏனைய நாடுகள் எம்மைஅங்கீகரிக்க வேண்டும்.
ஒடுக்கப்பட்ட எம் மக்களுக்கு விடுதலை வேண்டும் என்ற தாகம் முற்றிலும்நியாயமானதே.ஆனால் நாடுகளை எம் பக்கம் திரும்புவதற்கான வேலை பிரம்மாண்டமானது.
எமக்குள்மட்டும் சர்ச்சை செய்து கொள்வதும், தமிழ் மக்களிற்குள்ளேயே தம் கருத்துடன்ஒத்து வராதவர்கள் அல்லது தமக்கு கீழ் வராதவர்களை எதிரியாகவும், துரோகியாகவும்சித்திரிப்பவர்கள் நாடுகளின் ஆதரவைத் தமிழ் மக்கள்பால் திருப்புவது மிகக்குறைவு.
நாடுகளின் ஆதரவை எம் மக்களின் கோரிக்கைகளிலுள்ள நியாயத்தைஆதாரபூர்வமாக எடுத்துரைத்து அவர்களை எமது நட்பு நாடாக மாற்ற வேண்டும் என்பதேபிரித்தானிய தமிழர் பேரவையின் கொள்கையாகும்.
அடுத்தவர்களை குறை குற்றம் கூற ஒரு நிமிடம் போதும். ஆனால் அது எம் போராட்டத்தைசின்னாபின்னமாக்கி தமிழ் மக்களின் சக்தியை சிதறடிக்கும். இது தமிழினத்தின்எதிரியின் கையை வலுப்படுத்தும்.
ஆனால் நாடுகளை எம் பக்கம் திருப்புவது மிகக்கடினமானது. அதில் தம் சக்தியை ஒருங்கு திரட்டுபவர்களே இன்று எமக்குத் தேவை.இதனை ஏற்றுக் கொள்பவர்கள் செயலில் அதனைக் காட்டுங்கள்.
நாடுகளை வென்றெடுக்கயார் புத்திபூர்வமாக அர்ப்பணிப்போடு செயல்படுகின்றார்களோ அவர்களுக்கு தங்களால்முடிந்த ஆதரவை வழங்குங்கள்.
சர்வதேச நிலைமைகள், பூகோள அரசியல் என்பனவற்றை நுட்பமாக அறிந்து எம்போராட்டத்திற்கான நாடுகளின் ஆதரவு திரட்டப்பட வேண்டும்.
நேரடியாக செயலில்ஈடுபட்டு அந்தப் பட்டறிவுடன் வேலை செய்ய அல்லது கருத்துக்களை எடுத்தியம்பவேண்டும்.
நுனிப் புல் மேய்வது போல புத்தகங்களிலோ இணையத் தளங்களை வாசித்தோஊகித்தறிதல் மூலமோ சர்வதேச நகர்வுகளை முடிவு செய்தல் எம்மை சரியான திசையில்நகர விடாது.
நாடுகளை சபிப்பதும் திட்டுவதும் தமிழர்களை துரோகி பட்டம்சுமத்துவதும் தான் தெரிவு என்றால், பெரும்பாலான எம் மக்கள் அதனைக்கணக்கிலெடுக்கப் போவதில்லை.
எம் மக்கள் புத்திசாலிகள்.வலியில்லாமல் வெற்றிகள் வரப் போவதில்லை.புலம்பெயர்வாழ் மக்கள், சனநாயக ரீதியாக அறவழியில் போராடும் தாயக மக்களுக்கானசர்வதேச கவனம் குவிப்பு மற்றும் சர்வதேசத்தின் பாதுகாப்பு பெற்றுக் கொடுக்கவேண்டும்.
அதன் மூலம் கிடைக்கும் வெளியினைப் பயன்படுத்தி தமக்கான நீதியைக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் ஒற்றுமையாக குறுகிய அரசியலைக் கடந்து போராடுவார்கள்.
இன்று அந்த வெளி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எம் மக்களின் நீதியான போராட்டம்மேலும் வளரும். ஒடுக்கப்பட்ட எம் மக்களின் போராட்டம் நிச்சயம் உலகஅங்கீகாரத்தினைப் பெறும்!
எம் விடுதலைப் போராட்டத்தில் நெருப்பாக எரிந்தவர்கள், கருகித் தீய்ந்துபோனவர்கள், அங்கங்களை இழந்தவர்கள் எல்லோரையும் ஒரு கணம் எம் கண்களை மூடிதியானிப்போம்.
அவர்கள் கனவு மெய்ப்பட வைப்பதே எமக்காக தமது இன்னுயிரைத்தியாகம் செய்தவர்களுக்கு நாம் செய்யும் அதியுயர்ந்த மரியாதை!
சொல்லல்ல, செயலே இன்று தேவை!

