Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சம்பியனை உறுதி செய்ய மாத்தறை சிட்டி கழகத்திற்கு ஒரே ஒரு வெற்றி தேவை

August 28, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
சம்பியனை உறுதி செய்ய மாத்தறை சிட்டி கழகத்திற்கு ஒரே ஒரு வெற்றி தேவை

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்தாட்ட போட்டியில் சம்பியன் பட்டத்தை உறுதி செய்வதற்கு மாத்தறை சிட்டி கழகத்திற்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி (3 புள்ளிகள்) தேவைப்படுகிறது.

நியூ ஸ்டார் அணிக்கு எதிராக காலி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் அணிகள் நிலையில் 31 புள்ளிகளுடன் முதலாம் இடத்திற்கு மாத்தறை சிட்டி முன்னேறியுள்ளது.

அதேவேளை, குருநாகல் மாலிகாபிட்டி மைதானத்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டியில் பெலிக்கன்ஸ் கழகத்திடம் 1 – 3 என்ற கோல்கள் அடிப்படையில் ஜாவா லேன் தோல்வி அடைந்ததால் சம்பியனாகும் அதன் எதிர்பார்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் ஜாவா லேனின் தோல்வியை அடுத்து இந்த வருட சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் மாத்தறை சிட்டி கழகம் மாத்திரமே தோல்வி அடையாத அணியாக மிஞ்சியிருக்கிறது.

நியூ ஸ்டார் கழகத்துடனான போட்டியில் 3 புள்ளிகளை மாத்திரம் குறிவைத்து விளையாடிய மாத்தறை சிட்டி கோல்களின் எண்ணிக்கை பற்றி கவலைப்படவில்லை.

போட்டியின் 9ஆவது நிமிடத்தில் பொவாடு ப்றின்ஸ் முதல் கோலை போட்டு மாத்தறை சிட்டியை முன்னிலையில் இட்டார்.

அதனைத் தொடர்ந்து நியூ ஸ்டார் கழகம் எதிரணிக்கு கோல் போட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.

எனினும் 75ஆவது நிமிடத்தில் நியூ ஸ்டார் கழகம் இழைத்த சிறு தவறைப் பயன்படுத்தி ரெஹான் வீரப்புலி கோல் போட்டு மாத்தறை சிட்டியின் கோல் எண்ணிக்கையை 2ஆக உயர்த்தினார்.

ஜாவா லேனுக்கு ஏமாற்றம்

பெலிக்கன்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் ஜாவா லேன் கழகம் முதலில் கோல் போட்ட போதிலும் இறுதியில் ஏமாற்றமே காத்திருந்தது.

போட்டியின் 13ஆவது நிமிடத்தில் நவீன் ஜூட் பந்தை இடதுபுறமாக நகர்த்திச் சென்று அருமையான கோல் ஒன்றைப் போட்டு ஜாவா லேன் கழகத்தை முன்னிலையில் இட்டார்.

எனினும் 28ஆவது நிமிடத்தில் பிரான்சிஸ் அக்பெட்டி பரிமாறிய பந்தை பெற்றுக்கொண்ட நப்ஷான் மொஹமத், முன்னால் நகர்த்தி கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.

இடைவேளைக்கு 3 நிமிடங்கள் இருந்தபோது பெலிக்கன்ஸின் 2ஆவது கொலை லஹிரு சம்பத் போட்டார்.

இடைவேளையின் பின்னர் 66ஆவது நிமிடத்தில் நப்ஷான் மொஹமத் தனது 2ஆவது கோலை போட்டு பெலிக்கன்ஸ் கழகத்தின் வெற்றியை உறுதி செய்தார்.

வெற்றிதோல்வி இல்லை

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற நாவாந்துறை சென். மேரிஸ் கழகத்துக்கும் அநுராதபுரம் சொலிட் கழகத்துக்கும் இடையிலான சம்பியன்ஸ் லீக் போட்டி 3 – 3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

தேசிய முன்னாள் வீரர் செபமாலைநாயகம் ஞானரூபன் 7ஆவது, 13ஆவது நிமிடங்களில் அலாதியான கோல்களைப் போட்டு சென். மேரிஸ் கழகத்தை முன்னிலையில் இட்டார்.

ஆனால், சொலிட் கழகம் 3 நிமிட இடைவெளியில் 2 கோல்களைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தியது.

17ஆவது நிமிடத்தில் மதுரங்க மெண்டிஸும் 20ஆவது நிமிடத்தில் சமித் மதுரங்கவும் 3 நிமிட இடைவெளியில் கோல்களைப் போட்டனர்.

இடைவேளையின் பின்னர் 50ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் மரியதாஸ் நிதர்சன் கோல் போட்டு சென். மேரிஸ் கழகத்தை முன்னிலையில் இட்டார்.

ஆனால், 56ஆவது நிமிடத்தில் மதுரங்க தனது 2ஆவது கோலைப் போட்டு சொலிட் கழகம் சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார்.

இ.போ.ச.வுக்கு ஏமாற்றம்

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இ.போ.ச. கழகத்துக்கும் சுப்பர் சன் கழகத்துக்கும் இடையிலான சம்பியன்ஸ் லீக் போட்டி 2 – 2 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

போட்டியின் முதல் 3 நிமிடங்களுக்குள் ஷரீக் அஹமத், சிவராஜா கிரிஷாந்தன் ஆகியோர் அடுத்தடுத்து கோல்களைப் போட்டு இ.போ.ச. கழகத்தை முன்னிலையில் இட்டனர். ஆனால், 12 நிமிட இடைவெளியல் 5 கோல் போடும் வாய்ப்புகளை தவறவிட்டதால் இ.போ.ச.வுக்கு ஆட்டத்தை வெற்றிதோல்வியின்றி முடித்துக் கொள்ள நேரிட்டது.

சுப்பர் சன் சார்பாக ஹசித்த ப்ரியன்கர மிக அருமையான 2 கோல்களைப் போட்டார்.

போட்டியின் 20ஆவது நிமிடத்தில் இடதுபுறத்திலிருந்து கோணர் கிக் மூலம் நேரடி கோல் போட்ட ப்ரியன்கர, 45ஆவது நிமிடத்தில் 30 யார் ப்றீ கிக் மூலம் மற்றொரு அலாதியான கோலை போட்டார்.

இடைவெளையின் பின்னர் இரண்டு அணிகளுமே சோர்வுடன் விளையாடியதால் போட்டியில் விறுவிறுப்பு காணப்படவில்லை.

Previous Post

நாளை முதல் தனியார் பேரூந்து போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்படும் | தனியார் பேரூந்து உரிமையாளர்

Next Post

இலங்கையை மிக இலகுவாக வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

Next Post
இலங்கையை மிக இலகுவாக வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

இலங்கையை மிக இலகுவாக வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures