Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சம்பந்தனின் பதவியை காப்பாற்ற வேண்டும்

January 2, 2019
in News, Politics, World
0

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தொடர்ந்தும் வகிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அரசு தன்னால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா விடுத்திருக்கும் அறிக்கையயான்றில் கூறியிருப்பதாவது –

“அண்மைய அரசியல் நெருக்கடியின் பின்புலத்தில் நோக்கும்போது நாடாளுமன்றத்தைக் கலைத்ததில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அரசமைப்பை மீறிச் செயற்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த அதேவேளை, இரா.சம்பந்தனின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நெருக்கடியில் சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்புடனும் பேரம் பேசாமல் அரசமைப்பின் பிரகாரம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்குக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தது.

ஆனால், அரசியல் நெருக்கடியின் முடிவில் கூட்டமைப்பு அரசியல் ரீதியில் சிக்கலான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. அதாவது, அரசியல் நெருக்கடியின்போது தாங்கள் கடைப்பிடித்த அணுகுமுறைகளினால் தமிழ் மக்கள் பெற்றிருக்கக் கூடிய பயன் என்று எதையும் தங்கள் வாக்காளர்களுக்குக் காண்பிக்க இயலாதவர்களாகக் கூட்டமைப்பின் தலைவர்கள் இருக்கிறார்கள்.

அவ்வாறு பயன்எதையும் காட்ட முடியாமல் போகுமேயானால் தீவிர தமிழ்த் தேசியவாதக் கட்சிகளின் பிரசாரங்களின் விளைவாக கூட்டமைப்பின் அரசியல் பலம் அருகிப்போய் விடக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு நாட்டுக்குள்ளும் வெளியேயும் ஓர் உத்தியோகபூர்வ மதிப்பு அந்தஸ்தை வழங்கியது. கூட்டமைப்பின் தலைவர் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களின் வரிசையில் ஒருவராகவும் விளங்கக்கூடியதாக இருந்தது.

இது கூட்டமைப்புக்கோ அல்லது அதற்கு வாக்களித்த தமிழ்ச் சமூகத்துக்கோ வெறுமனே ஓர் அடையாள பூர்வமான கெளரவம் அல்ல. எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு முக்கியமாக இருந்ததற்கு மிகுந்த நடைமுறைக் காரணங்களும் உள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பிலான சர்ச்சையில் கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடுவதற்கான நடவடிக்கைகளுக்குத் தயாராவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சுய நலன்களின் அடிப்படையில் செயற்படுகின்ற அரசியல் தலைமைத்துவங்களைப் போலன்றி , நீதிமன்றங்கள் தர்க்கநியாயத்துடன் பிரச்சினைகளை அணுகக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளன என்பதுஇப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் முன்னிலையில் கூட்டமைப்பினால் இரு முக்கிய வாதங்களை முன்வைக்க முடியும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி சிறிசேன அரசின் அங்கமாக இருக்கிறார். அதனால் அவரின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவராவது தர்க்க நியாயத்துக்குப் பொருந்தாது. ஜனாதிபதி மூன்று அமைச்சுப் பொறுப்புக்களையும் தன்வசம் வைத்திருக்கிறார்.

இரண்டாவதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஓர் அங்கமாக இல்லாத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க் கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது. இத்தகையதொரு சூழ் நிலையிலே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்கு கூட்டமைப்பு முன்னெடுக்கக் கூடிய முயற்சிகளை ஆதரிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது” என்றுள்ளது.

Previous Post

புதிய அரசமைப்பு ஊடாக தீர்வு வர வாய்ப்பு இல்லை: சுரேஷ்

Next Post

நோயாளியிடம் நகையைத் திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்.!

Next Post

நோயாளியிடம் நகையைத் திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

June 16, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் ; காணொளி வைரல் ; சம வயதுடைய சிறுவன் கைது 

June 16, 2026
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் –  சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் –  சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் 

June 16, 2026
தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures