சந்தேகத்திற்கிடமான போதை மருந்தினால் ஒருவர் மரணம் ஐவர் வைத்தியசாலையில்!

ரொறொன்ரோ இரவு விடுதிகளில் ஒரே இரவில் சந்தேகத்திற்கிடமான போதை மருந்தினால் ஒருவர் மரணமடைந்தும் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையும் தொடர்ந்து பொலிசார் பாது காப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். சனிக்கிழமை அதிகாலை இச்சம்பவம் நடந்துள்ளது.
MDMA எனப்படும் போதை மருந்து சம்பந்தப்பட்ட இரு வெவ்வேறு சம்பவங்கள் குறித்த அழைப்புக்கள் பொலிசாருக்கு கிடைத்ததாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவங்கள் எச்சரிக்கை ஒன்றை வெளியிட பொலிசாரை தூண்டியுள்ளது. MDMA எனப்படும் குறிப்பிட்ட போதை மருந்திற்கும் மத்திய அரசாங்கத்தின் வலைத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டிருந்த பரவச அபாயங்களிற்கும் இணைப்பு இருப்பதாக கருதப்படுவதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
ஒரு கெட்ட மருந்து தொகுப்புகள் குறித்து நகரின் அவசர மருத்துவ சேவை மற்றும் உள்ஊர் வைத்தியசாலைகளையும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.
அதிகலை 12.37மணியளவில் Bathurst மற்றும் அடலெயிட் வீதியில் அமைந்துள்ளUniun Nightclub-ல் மூன்று சம்பவங்கள் நடந்துள்ளது. வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரில் ஒருவர் இறந்துவிட்டார்.
இச்சம்பவம் நடந்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர் அதிகாலை 1.16மணியளவில் செறி மற்றும கொமிசனர்ஸ் வீதி பகுதியில் இருந்து அவசர மருத்துவ சேவையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அப்பகுதியில் அமைந்துள்ள றெபெல் இரவு விடுதியில் இருந்து அபாயமான நிலையில் மூவர் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போதை மருந்து அளவிற்கதிகமாக எடுக்கப்பட்டதா, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் வயது, ஆண்களா, பெண்களா அல்லது அவர்களின் நிலைமைகள் எதுவும தெரிய வரவில்லை.

drug2

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *