சசிகலா பதில் எதிரொலி! ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் குறித்த சசிகலா பதில் கடிதம் சமர்பித்ததால் வருகிற 14ம் திகதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்தெடுக்கப்பட்டது செல்லாது என ஓபிஎஸ் அணியினர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தனர்.
இதுபற்றி விளக்கம் தருமாறு சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு சசிகலா தரப்பில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்க கடிதம் அனுப்பினார்.
அதை தேர்தல் ஆணையம் ஏற்க்காத நிலையில் பெங்களூர் சிறையிலிருக்கும் சசிகலா, வழக்கறிஞர் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு பதில் கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், சசிகலாவின் விளக்க கடிதத்தின் நகல்களை புகார்தாரர்களான ஓபிஎஸ் அணிக்கு அனுப்பியுள்ள தேர்தல் ஆணையம் அவர்கள் தரப்பு விளக்கத்தை கேட்டுள்ளது.
எதிர்வரும் 14ம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியினருக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.