அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்து பொதுக்குழு தான் முடிவு எடுக்க முடியும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமி அணி சசிகலாவை விலக்கி வைத்ததாகக் கூறுகிறார்கள்.
ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை சந்திக்கிறார். இதன்மூலம், அவர்கள் நல்ல நாடகம் ஆடுகிறார்கள் எனத் தெரிகிறது என தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்து பொதுக்குழுதான் முடிவு எடுக்க வேண்டும்.
அதிமுக பொதுக்குழு கூட வேண்டுமென்றால் இரு அணிகளும் விரைவில் இணைய வேண்டும் என தெரிவித்துள்ளார்