Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சசிகலாவுக்கு எதிராக திரும்பிய தீர்ப்பு : பன்னீர்செல்வத்தின் முக்கிய வேண்டுகோள்

February 15, 2017
in News
0
சசிகலாவுக்கு எதிராக திரும்பிய தீர்ப்பு : பன்னீர்செல்வத்தின் முக்கிய வேண்டுகோள்

சசிகலாவுக்கு எதிராக திரும்பிய தீர்ப்பு : பன்னீர்செல்வத்தின் முக்கிய வேண்டுகோள்

சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் முதல்வர் பன்னீர்செல்வம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தே குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“எனது அன்புக்குரிய கழக அமைச்சர்களே, கழக சட்டமன்ற உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்,

கடந்த 07.02.2017 அன்றிரவு, உங்கள் அன்பு சகோதரன் ஆகிய நான், ஜெயலலிதா நினைவகத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு, பின்னர் ஜெயலலிதாவின் ஆன்மா எனக்கு அளித்த மானசீக உத்தரவின் பேரில், எனது மனதில் அடக்கி வைத்திருந்த சில உண்மைகளை செய்தியாளர்கள் மூலம் தங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிவித்தேன்.

இதனைத் தொடர்ந்து எனது நிலைப்பாட்டிற்கு மாநிலம் முழுவதும் கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எம்ஜிஆரால் துவக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காத்து, வளர்க்கப்பட்டு வந்த நமது மாபெரும் அஇஅதிமுக இயக்கத்தைச் சேர்ந்த சுமார் ஒன்றரைக் கோடி உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக தொடர்ந்து ஏகோபித்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதா மறைந்த அன்று இரவு உங்கள் அனைவராலும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கனத்த இதயத்துடன் முதலமைச்சராக பதவியை ஏற்று, உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு ஜெயலலிதா வழியில், கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில், ஜெயலலிதாவின் ஆட்சியை அவர் இல்லை என்ற குறை பொதுமக்களுக்கு தெரியாதவாறு தொடர்ந்து நடத்தி வந்தோம்.

ஜெயலலிதா ஆட்சியை அனைத்து தரப்பினரும் பாராட்டி வந்தனர். நாம் யாரும் எதிர்பாராத வகையில் நடந்த ஒரு சில நிகழ்வுகளால் கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவின் ஆட்சி மீதமுள்ள ஆண்டுகளுக்கு தொடர்வதில் தற்காலிக இடையூறு மட்டுமே ஏற்பட்டுள்ளது.

எனவே, தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இடையூறை நீக்கி, நாம் அனைவரும் ஒன்றுமையுடன் இருந்து கழகத்துக்கு எவ்வித ஊறும் ஏற்படாமல் காத்து ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர தேவையானவற்றை நம் மனசாட்சிபடி உடனடியாக மேற்கொள்ள வேண்டியது நமது அனைவரின் கடமையாகும். இதுவே மானசீகமாக ஜெயலலிதாவுக்க நாம் செலுத்தும் நன்றி கடனாகும்.

காலத்தின் சதியினால் ஜெயலலிதா நம்மிடையே இருந்து தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர வேண்டுமென்ற காரணத்தினாலேயே நமக்கு வாக்களித்து நம்மை வெற்றி பெற செய்தனர்.

தற்போது ஜெயலலிதா நம்மிடையே இல்லாத சூழ்நிலையில், பொதுமக்கள், குறிப்பாக கழக வெற்றிக்காக அல்லும், பகலும் கண் அயராது உழைத்த நமது கழக கண்மணிகள் அனைவரும் எதை விரும்புகின்றனர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, அவர்கள் காட்டும் வழியிலேயே செல்வதுதான் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நமது அனைவரின் கடமையாகும். இதுவே நமது மாநிலத்திற்கும் நலம் சேர்க்கும். ஜெயலலிதாவின் நல்லாட்சித் தொடர அவர்கள் அனைவரது ஆதரவும் நமக்கு இன்றியமையாததாகும்.

எனவே, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போதுள்ள ஒட்டுமொத்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்தவிதமான முடிவு எடுத்தால், அது கழக ஒற்றுமைக்கும், ஜெயலலிதாவின் நல்லாட்சித் தொடர்வதற்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு நல்ல முடிவு எடுத்து செயல்பட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தற்காலிகமாக நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையுடன் இருந்து அவரவருக்குரிய முக்கியத்துவத்துடன் தொடர்ந்து செயல்படுவதில் எவ்வித தயக்கமும் இருக்காது என்பதை நான் இத்தருணத்தில் உங்கள் அனைவருக்கும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், நம் எதிரிகள், நாம் பிளவுபடுவதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. அவ்வாறு இடமளிப்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா என்றும் மன்னிக்காது. ஜெயலலிதா தங்கள் வாழ் நாள் முழுவதும் எக்கொள்கைக்காக வாழ்ந்தார்களோ, அதை தொடர்ந்து கடைப்பிடித்து, அவர் விட்டுச் சென்ற பணிகளை நாம் ஒற்றுமையுடன் தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். ஜெயலலிதாவின் புகழையும், எம்.ஜி.ஆரின் புகழையும் என்றென்றும் அழியாது காத்து மேன்மேலும் ஓங்க செய்திட கழகக் கண்மணிகளும் பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Tags: Featured
Previous Post

சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Next Post

தமிழக அரசியலில் திருப்பம்: மீண்டும் ஜெயலலிதா சமாதிக்கு முன்னால் பன்னீர்செல்வம் !

Next Post
தமிழக அரசியலில் திருப்பம்: மீண்டும் ஜெயலலிதா சமாதிக்கு முன்னால் பன்னீர்செல்வம் !

தமிழக அரசியலில் திருப்பம்: மீண்டும் ஜெயலலிதா சமாதிக்கு முன்னால் பன்னீர்செல்வம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures