கோப்பிக்குள் 37கிலோ கிராம் அபின் கடத்தல்.
கனடா-37கிலோ கிராம் அபினை கோப்பிக்குள் வைத்து கடத்தியதை கனடிய எல்லைப்புற அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜேர்மனியில் இருந்து கனடா வந்த கோப்பி பொதிக்குள் மறைத்து வைத்து கோப்பி போன்று அனுப்பபட்டுள்ளது. ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகாரிகள் பெட்டியை திறந்து பார்த்தபோது 35கட்டிகள் காணப்பட்டதாகவும் அனைத்தும் அபின் என கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.