Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோட்டாபய தமிழ் மக்களின் விரோதி!!

August 12, 2019
in News, Politics, World
0

தமிழ் மக்களினை பொறுத்தவரையில் கோட்டாபய தமிழ் மக்களின் விரோதியாகவே தமிழ் மக்களினால் பார்க்கப்படுகின்றார் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கிஸ்தருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இந்த நாட்டில் தமிழர்கள் சிங்கள தலைவர்களை நம்பி ஏமாந்த வரலாறே காணப்படுகின்றது.

இறுதியாக 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஒட்டுமொத்த சிறுபான்மையினமும் ஜனாதிபதியாக்கி இன்று அவரை நம்பி ஏமாந்த நிலையில் இருக்கின்றோம்.

இன்னுமொரு தடவை சிங்கள தலைமைகளை நம்பி ஏமாறவேண்டிய நிலையில் நாங்களும் இல்லை, தமிழ் மக்களும் இல்லை. அதற்காக ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் நிலையும் இல்லை.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்த காரணத்தினால் தமிழ் மக்கள் என்ன கஸ்டங்களை அனுபவித்தார்கள் என்பதை நாங்கள் உணரவேண்டும்.

தமிழர்கள் தங்களது வாக்குகளை இந்த நாட்டில் ஜனாதிபதியாக வருபவருக்கு இனிமேல் வழங்கவேண்டுமாகவிருந்தால் அவரிடமிருந்து உறுதியான உறுதிமொழியொன்று வடகிழக்கு தமிழ் மக்கள் தொடர்பாக உண்மையான கரிசனை கொண்டுள்ள சர்வதேச நாட்டின் மத்தியஸ்ததுடன் ஒப்பந்தம்; ஒன்று உருவாக்கி அதன் மூலம் ஒறுதிமொழி வழங்கப்படுவதன் ஊடாகவே ஒரு தலைவரை நாங்கள் ஆதரிக்கலாம்.

எந்தவொரு வேட்பாளரையும் பெரும்பான்மை கட்சிகள் தற்போதைய நிலையில் அறிவிக்காத நிலையில் ஊகத்தின் அடிப்படையில் எந்த கருத்தினையும் தெரிவிக்கமுடியாது.

வேட்பாளர்கள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் வெளியிடப்படும்போது அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பான விடயங்களை கருத்தில்கொண்டு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் பூர்த்திசெய்யக்கூடிய ஒருவரை தெரிவுசெய்யவேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாக இருக்கவேண்டும் என நான் கருதுகின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் காணப்படுகின்றன. அதில் உள்ள புளோட் கட்சியின் தலைவர் சித்தார்த்தன் கோட்டாபயவை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருனமான என்.கே.சுமந்திரனும் கோட்டாபயவை சந்தித்ததாக அறிந்தோம்.

தமிழ் மக்களினை பொறுத்தவரையில் கோட்டாபய தமிழ் மக்களின் விரோதி என்றவகையிலேயே குறிப்பிட்டளவிலான தமிழ் மக்கள் பார்க்கின்றனர். முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் அழிவுக்கு காரணம் கோட்டாபய என்பதை இன்னும் தமிழ் மக்கள் மறக்கவில்லை.

இருந்தபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில் கடந்த கால இழப்பிற்கும் எமக்கு செய்யப்பட்ட அநீயாயத்திற்கான நியாயத்தினையும் இந்த நாட்டில் இனியொரு அழிவு, போராட்டம் இடம்பெறாமல் இருப்பதற்கும் வடகிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடிய வகையில் தீர்வுத்திட்டத்தினை முன்வைக்கும் ஜனாதிபதி வேட்பாளரை பரிசீலனை செய்யவேண்டும்.

அதனைவிடுத்து தனிப்பட்ட ஒரு வேட்பாளருக்காக தனிப்பட்ட ஒருவரின் அபிலாசைகளுக்காக நாங்கள் செயற்படக்கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறிவருகின்றனர். அவ்வாறான எந்த முரண்பாடுகளும் இல்லையென்பதே எனது கருத்து’ என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அதிகாரத்தை பயன்படுத்திய அரசாங்கம்: நாமல்

Next Post

கம்பரெலிய திட்டத்தில் ஊழல்!!

Next Post

கம்பரெலிய திட்டத்தில் ஊழல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures