Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபயவின் வழியில் சென்று நாட்டை நட்டாற்றில் விடாதீர்கள் – ரணிலை எச்சரிக்கும் முஜிபுர் ரஹ்மான்

December 9, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணில் தொடர்பில் அமைச்சர்கள் முன் கோட்டாபய எடுத்துள்ள சபதம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டாபய ராஜபக்சவின் வழியில் சென்றால் சர்வதேச நாடுகளின் உதவிகள் எமக்குக் கிடைக்காது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  எச்சரித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபயவின் வழியில் சென்று நாட்டை நட்டாற்றில் விடாதீர்கள் - ரணிலை எச்சரிக்கும் முஜிபுர் ரஹ்மான் | Country Sajith Warns Ranil

மக்களுக்குப் பிரச்சினை ஏற்படும் போது ஜனநாயக ரீதியாகப் போராடுவது அவர்களின் உரிமை அதைத் தடுக்க முடியாது. அவ்வாறு போராட்டம் நடத்தினால் இராணுவத்தைக் கொண்டு தடுப்பேன் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவதை ஏற்க முடியாது.

இது ஜனநாயக மீறல் – மனித உரிமை மீறல். இதைத்தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் செய்தார்.

மீண்டும் பாதிக்கப்படும் பொருளாதாரம்

கோட்டாவின் வழியில் ரணிலும் சென்றால் நாடு அவ்வளவுதான். நாடு பொருளாதார ரீதியில் மீண்டும் பின்தள்ளப்படும். நாடு இப்போது இருக்கின்ற நிலையில் இந்த மாதிரியான ஹிட்லரின் செயற்பாடுகள் சரி வராது.

இதன் மூலம் பிரச்சினைகள் தீராது. பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்ய வேண்டும்.

கோட்டாபயவின் வழியில் சென்று நாட்டை நட்டாற்றில் விடாதீர்கள் - ரணிலை எச்சரிக்கும் முஜிபுர் ரஹ்மான் | Country Sajith Warns Ranil

அதுதான் ஒரு நாட்டுத் தலைவருக்கு அழகு. ஜனாதிபதி பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் எதற்காக மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடப் போகின்றார்கள்?

பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாடுகளின் உதவிகள் அவசியம். ஆனால், மக்களை அடக்கும் ஜனநாயக விரோத அறிவிப்புக்களை வெளியிட்டால் அந்த நாடுகளின் உதவி கிடைக்காது.

கோட்டாவின் வழியில் செல்ல வேண்டாம். சென்றால் அவ்வளவுதான் என்று ரணிலிடம் மீண்டும் மீண்டும் சொல்லி வைக்க விரும்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்-நவீன் திஸாநாயக்க வெளியிட்ட தகவல்

Next Post

சித்திரப்போட்டியும் மாபெரும் கண்காட்சியும்

Next Post
யாழ். பல்கலைக்கழகத்தில் பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!

சித்திரப்போட்டியும் மாபெரும் கண்காட்சியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures