Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த விசேட உத்தரவு!

August 8, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

காணாமலாக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீர்ராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்குச் சாட்சியம்

இதனடிப்படையில் அன்றைய தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி, இணையவழி (Online) மூலமாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திற்குச் சாட்சியமளிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த விசேட உத்தரவு! | Gotabaya Ordered To Testify In Disappearance

2011 டிசம்பர் 10 அன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த காணாமல்போனோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த வேளையில், லலித்குமார் வீர்ராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவாரங்கல் பகுதியில் வைத்துக் காணாமல்போயினர்.

யாழ்ப்பாணத்தில் விசாரணை 

2012 இல் இவர்களின் உறவினர்களால் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (Habeas Corpus) தாக்கல் செய்யப்பட்டது.

கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த விசேட உத்தரவு! | Gotabaya Ordered To Testify In Disappearance

இச்சம்பவம் தொடர்பான சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி 2012 செப்டம்பர் 19 அன்று யாழ்ப்பாணத்தில் விசாரணை ஆரம்பமானது.

மீண்டும் விசாரணை

2017 இல் இவ்வழக்கின் சாட்சிகள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்சவின் பெயர் சேர்க்கப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களினால் தம்மால் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக முடியாது எனப் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபய ராஜபக்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்ததுடன், தனது சட்டத்தரணிகள் ஊடாக இணையவழியில் சாட்சியமளிக்க அனுமதி கோரியிருந்தார்.

கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த விசேட உத்தரவு! | Gotabaya Ordered To Testify In Disappearance

அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பொருத்தமான ஒரு நீதிவான் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி அங்கிருந்து இணையவழியில் சாட்சியமளிக்க அனுமதி அளித்திருந்தது.

அதனடிப்படையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இருந்தவாறு சாட்சியமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

போட்டோகிராபர்- ‌ திரைப்பட விமர்சனம்

Next Post

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாயவில் இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம்!

Next Post
சம்பா, கீரி சம்பாவுக்கு பதிலாக மாற்று அரிசியை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி வெளியானது

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாயவில் இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம்!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் அயோமல் அக்கலன்க ஐந்தாம் இடம்

ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் அயோமல் அக்கலன்க ஐந்தாம் இடம்

September 29, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை காப்பாற்ற தீவிர நடவடிக்கை – அரசாங்கம்

September 29, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்படும் சுமையை குறைக்க 41 பில்லியன் ரூபா மானியம் – அரசாங்கம் அறிவிப்பு

September 29, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு? – அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்

September 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures