கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 11 வயது மாணவனைக் கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதிவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேகக நபரான ஆசிரியரின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் தமது மகன் வாந்தி எடுக்க ஆரம்பித்ததாகவும் அதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் மாணவனின் பெற்றோர் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலால் மாணவனுக்கு உட்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர் உரிமைகளுக்காக வாதிட்ட சட்டத்தரணி குமார வெல்கம தெரிவித்தார்.













