கொரோனா வைரஸ்; சமூகத்துக்குள் பரவும் ஆபத்துள்ளதை நிராகரிக்க முடியாது என இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கந்தக்காட்டிலிருந்து வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு இந்த வாரம் மிகமுக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கந்தக்காடு கொரேனா வைரஸ் நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள அதேவேளை கொரோனா வைரஸ் நோயளிகளுடன் தொடர்பிலிருந்த சிலர் சமூகத்துக்குள் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
முகக்கவசங்களை அணிவது,கைகளை கழுவுவது,சமூக விலக்கல் போன்ற நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.













