Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா அச்சுறுத்தல், உலகை உலுக்கிய ஒற்றைப் புகைப்படம்

March 7, 2020
in News, Politics, World
0
கொரோனா அச்சுறுத்தல், உலகை உலுக்கிய ஒற்றைப் புகைப்படம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்பில் கண்காணிப்பில் உள்ள தமது 89 வயது கணவரை மூதாட்டி ஒருவர் சந்தித்துப் பேசும் புகைப்படம் ஒன்று தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

சீனாவுக்கு அடுத்து கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா. இன்று மட்டும் இருவர் பலியான நிலையில், மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை 14 என அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்றுடன் 230 என பதிவாகியுள்ளது. இந்த நிலையில் வாஷிங்டன் மாநிலத்தின் கிர்க்லாண்டில் அமைந்துள்ள கொரோனாவுக்கான சிறப்பு சுகாதார மையத்தில் இந்த அரிய சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 89 வயதான தமது கணவர் Gene-ஐ சந்திக்க 88 வயதான டோரதி காம்ப்பெல் சென்றுள்ளார்.

ஆனால் வெளியாட்கள் எவருக்கும் உள்ளே அனுமதி இல்லை என்பதால், ஜன்னல் கண்ணாடி வழியாக அவர் நலம் விசாரித்துள்ளார்.

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டுள்ள பலரும் அந்த சிறப்பு சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டோரதி வியாழக்கிழமை தனது கணவருடன் எவ்வாறாயினும் தொடர்பு கொள்ள வேண்டும் என தீவிரமாக முயன்றுள்ளார்.

ஒருவழியாக தமது கணவரை ஜன்னல் கண்ணாடி வழியாக பார்க்க முடிந்த மகிழ்ச்சி அவரது முகத்தில் பிரதிபலித்தது என அவரது மகன் சார்லி காம்ப்பெல் தெரிவித்துள்ளார்.

இருவரும் தொலைபேசி வாயிலாக சில நிமிடங்கள் பேசியுள்ளனர். நீண்ட 60 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்த அவர்களுக்கு சில நாள் பிரிவு தாங்க முடியவில்லை.

அதனாலையே தமது கணவரை காண வேண்டும் என அந்த தள்ளாத வயதிலும் அவர், சுகாதார மையத்திற்கு விரைந்துள்ளார்.

கொரோனா அச்சம் விலகி தனது கணவர் எப்போது குடியிருப்புக்கு திரும்புவார் என்ற தகவல் உறுதியாக தெரியவில்லை என்றாலும், ஒரு முறை பார்க்க முடிந்த மகிழ்ச்சியில் டோரதி வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

டோரதி குடியிருக்கும் கிங் கவுண்டி பகுதியில் மட்டும், கொரோனா பாதிப்புக்கு இதுவரை 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து கிங் கவுண்டி நிர்வாகம் 4 மில்லியன் டொலர் தொகைக்கு ஒரு மொட்டேல் ஒன்றை வாங்கி, அந்த கட்டிடத்தை சுகாதார மையமாக மாற்றியுள்ளது.

Previous Post

சூரிச்சிலுள்ள பள்ளி ஒன்றில் ஒரு மாணவனுக்கு கொரோனா

Next Post

இத்தாலி நடுங்குகிறது 24 மணித்தியாலத்தில் 49 பேர் பலி

Next Post
இத்தாலி நடுங்குகிறது 24 மணித்தியாலத்தில் 49 பேர் பலி

இத்தாலி நடுங்குகிறது 24 மணித்தியாலத்தில் 49 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சுரேஷ் சலேவுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் – சுதேசிய ஜனபலய வலியுறுத்தல்

சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

August 26, 2026
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘நிஞ்ஜா’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘நிஞ்ஜா’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

August 26, 2026
ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய ப்ரபாத் ஜயசூரியவுக்கு கண்டன எச்சரிக்கை

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய ப்ரபாத் ஜயசூரியவுக்கு கண்டன எச்சரிக்கை

August 25, 2026
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

தேர்தல் வழக்கு : தமிழக முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

August 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures