Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொடூரமாகக் கொல்லப்பட்ட உறவுகளுக்கு கிளிநொச்சியில் இதய அஞ்சலி!

April 23, 2019
in News, Politics, World
0

கொடூரமாகக் கொல்லப்பட்ட உறவுகளுக்கு கிளிநொச்சியில் இதய அஞ்சலி!

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் மட்டக்களப்பு தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் உயிர்த்த ஞாயிறு அன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது முஸ்லிம் தீவிரவாத அமைப்பு மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் மூலம் கொடூரமாகக் கொல்லப்பட்ட அனைவருக்குமான இதய வணக்க நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக கிளிநொச்சியில் நடைபெற்றது.
இலங்கையின் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம் மற்றும் கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்டவர்கள் மீது மிகவும் கொடூரமான முறையில் முஸ்லிம் தீவிரவாத அமைப்பினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பலியான மக்களுக்கான இதய அஞ்சலி நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி புதிய பேருந்து நிலையத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்றுள்ளது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இந்து, கிறிஸ்தவ, கத்தோலிக்க மதகுருமார், கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன, பச்சிலைப் பள்ளிப் பிரதேச சபை தவிசாளர் சுரேன் மற்றும் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மிகவும் உணர்வுபூர்வமாக தமது இதய அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.

Previous Post

தற்கொலை குண்டுத் தாக்குதலில் 45 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்

Next Post

கொழும்பில் மூடப்படும் அரச தனியார் நிறுவனங்கள்

Next Post

கொழும்பில் மூடப்படும் அரச தனியார் நிறுவனங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures