கொடிய வாகன மோதலில் ஒருவர் மரணம் இருவர் படுகாயம்!
ரொறொன்ரோ-பிரம்ரனில் ஞாயிற்றுகிழமை காலை இடம்பெற்ற இரு-வாகன மோதலில் ஒருவர் இறந்து விட்டார்.மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பிரம்ரனில் கவுன்ரிசைட் டிரைவிற்கு அருகில் கோர்வே டிரைவ்வில் காலை 7.50 மணியளவில் விபத்து இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோதிய வாகனங்களில் ஒன்று விபத்தை தொடர்ந்து தீப்பற்றி எரிந்துள்ளது.
இறந்தவர் அந்த வாகனத்தின் சாரதி என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் மற்றய வாகனத்தில் இருந்தவர்கள்.
புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ள பொலிசார் மோதலை கண்டவர்களின் உதவியை நாடியுள்ளனர்.