கைத்தொலைபேசிகளை உளவு பார்க்கும் சாதனங்கள் மொன்றியல் விமான நிலையத்தில் கண்டுபிடிப்பு!

அண்மையில் நீங்கள் மொன்றியல் ட்ரூடோ சர்வசே விமான நிலையம் சென்றிருந்தால் உங்கள் கைத்தொலைபேசியை சிலர் ஒற்று கேட்டிருக்கலாம்.
றேடியோ-கனடா நிருபர் ஒருவர் மின்னணு கண்காணிப்பு சாதனம் ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளார்.  IMSI எனப்படும் ஒரு சாதனம் பிப்ரவரி 21 அன்று யு.எஸ். செல்ல காத்திருக்கையில் கண்டறிந்ததாக தெரிவித்தார்.
இவ்வெளிப்பாடு இவ்வார ஆரம்பத்தில் இச்சாதனம் ஒட்டாவா பாராளுமன்ற ஹில் பகுதியில் உபயோகப்படுத்தப் பட்டிருப்பது சிபிசி/றேடியோ-கனடாவின் கூட்டு புலன்விசாரனையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சாதனங்கள் சில சமயங்களில் மாடல் ஒன்றின் பெயரால்- StingRay-அருகில் உள்ள போன்களுடன் தொடர்பு கொள்ள கூடிய ஒன்றாகும். இதன் மூலம் அருகாமையில் உள்ள போன்களை வாசிக்க மூடியும்.
இவை கனடிய பொலிசார், பாதுகாப்பு அதிகாரிகள், வெளிநாட்டு புலனாய்வாளர்கள் மற்றும் ஏற்பாடு செய்யப்பட்ட குற்ற பிரிவினரால் உபயோகிக்கப்பட்டிருக்கலாம்.
பிற்பகல் பூராகவும் முன் மாலை வேளையிலும் பல சிவப்பு எச்சரிக்கைகள் கிடைக்கப்பெற்றுன என தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரூடோ விமான நிலையத்தை உளவு பார்ப்பது யார்?
இச்சாதனத்தை யார் பிப்ரவரி 21ல் ட்ரூடோ விமான நிலையத்ததில் வைத்திருப்பார்கள்?
தங்கள் புலனாய்வு நுட்பங்கள் குறித்த தகவல்கள் குறித்து கதைக்க பொலிசாரும் புலனாய்வு துறையினரும் மறுத்து விட்டனர்.
யு.எஸ்.தூதரகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.
இதே நேரம் விமான நிலையத்தை இயக்கும் நிறுவனமான Aéroports de Montréal, தாங்கள் IMSI சாதனம் உபயோகிப்பதில்லை என தெரிவித்தது.
monmon1

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *